Tuesday Temple: சிற்றரசர் பெருமைப்படுத்திய சிவபெருமான்.. மன்னர் பெயரிலேயே காட்சி கொடுத்த சிவந்தியப்பர்-tirunelveli district vikramasingapuram arulmigu sivanthiappar temple history can be known - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tuesday Temple: சிற்றரசர் பெருமைப்படுத்திய சிவபெருமான்.. மன்னர் பெயரிலேயே காட்சி கொடுத்த சிவந்தியப்பர்

Tuesday Temple: சிற்றரசர் பெருமைப்படுத்திய சிவபெருமான்.. மன்னர் பெயரிலேயே காட்சி கொடுத்த சிவந்தியப்பர்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 10, 2024 06:00 AM IST

Tuesday Temple: சிறப்பு மிகுந்த கோயில்கள் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அருள்மிகு சிவந்தியப்பர் திருக்கோயில். சிவபெருமான் சிவந்தியப்பர் எனவும் தாயார் வழியடிமைகொண்டநாயகி இன்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Tuesday Temple: சிற்றரசர் பெருமைப்படுத்திய சிவபெருமான்.. மன்னர் பெயரிலேயே காட்சி கொடுத்த சிவந்தியப்பர்
Tuesday Temple: சிற்றரசர் பெருமைப்படுத்திய சிவபெருமான்.. மன்னர் பெயரிலேயே காட்சி கொடுத்த சிவந்தியப்பர்

குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. பண்டைய காலம் தொட்டு இன்று வரை மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை சிவபெருமான் தன்வசம் வைத்திருக்கிறார். மன்னர்கள் காலத்தில் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.

குறிப்பாக இந்தியாவின் தெற்கு பகுதியைச் சேர்ந்த மன்னர்கள் சிவபெருமானை தங்களின் குலதெய்வமாக ஏற்று வழிபாடு செய்து கொண்டுள்ளனர். அவர்களே மிகப்பெரிய கோயில்களை கட்டி வழிபாடுகளையும் நடத்தி வந்துள்ளனர். அப்படிப்பட்ட கோயில்கள்தான் இன்றும் நாம் கண்டு வருகிறோம்.

பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரம் குறையாமல் வரலாற்றுச் சரித்திர குறியீடாக திகழ்ந்த வருகின்றது. மண்ணுக்காக ஒருபுறம் மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது கலை நயத்தையும் சிவபெருமான் மீது கொண்ட மிகப்பெரிய பக்தியையும் வெளிப்படுத்துவதற்காகவே தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் வியந்து போகும் அளவிற்கு மிகப்பெரிய சிவபெருமான் கோயில்களை கட்டி சென்றுள்ளனர்.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்கள் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் அருள்மிகு சிவந்தியப்பர் திருக்கோயில். சிவபெருமான் சிவந்தியப்பர் எனவும் தாயார் வழியடிமைகொண்டநாயகி இன்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் சிவந்தியப்பர். கோயிலின் தீர்த்தம் வாண தீர்த்தம் அருவி. இந்த திருக்கோயிலில் சிவபெருமான் சன்னதி நுழைவு வாயிலில் அதிகார நந்தி மற்றும் பைரவர் இருவரும் எதிரெதிரே காட்சி கொடுத்து வருகின்றனர்.

பிரகாரத்திலேயே முருக பெருமான் காட்சி கொடுத்து வருகிறார் அவருடன் சேர்த்து வள்ளி தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி காட்சி கொடுப்பது மிகவும் சிறப்பாகும். தெற்கு நோக்கி வழிகாட்டும் அம்பிகை காட்சி கொடுத்தவர் அவருக்கு வழியடிமை கொண்ட நாயகி என்ற பெயர் கொண்டு காட்சி கொடுத்து வருகிறார்.

இந்த திருக்கோயிலில் தலையில் தலைப்பாகை கட்டியபடி சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். இந்த திருக்கோயிலில் வழக்கம் போல் இல்லாமல் இடது கையை காலுக்கு கீழ் நாகத்தின் தலை மேல் கை வைத்தபடி தட்சணாமூர்த்தி காட்சி கொடுத்து வருகிறார்.

தல வரலாறு

இந்த பகுதியில் சிவந்தியப்பர் என்ற சிற்றரசர் ஒருவர் ஆட்சி செய்து வந்தார். மிகப்பெரிய சிவபக்தராக அவர் திகழ்ந்து வந்தார். மக்களின் வாழ்க்கை சிறப்பதற்காக தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிவபெருமானுக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என நினைத்துள்ளார்.

அதனால் சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து சிவந்தியப்பர் கோயில் ஒன்றை கட்டி எழுப்பினார். மன்னரைப் போல மக்களை இன்றும் சிவந்தியப்பர் சிவபெருமான் மக்களை காத்து வருகிறார். மன்னரின் பெயர் கொண்ட காரணத்தினால் சிவபெருமானுக்கு தலைப்பாகை சூட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner