Tirupati TTD: ‘ஒரு மணி நேரத்தில் திருப்பதி தரிசனம்’ AI தொழில்நுட்பத்தை களமிறக்கும் தேவஸ்தானம்!
இலவச தரிசனத்திற்காக வந்து 20, 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை அதிகபட்சம் 3 மணி நேரம் ஆகவும், 300 ரூபாய் தரிசனத்திற்காக வந்து 4 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை ஒரு மணி நேரமாகவும் குறைக்க வேண்டும் என்பது தேவஸ்தானத்தின் இலக்கு.
ஏ ஐ தொழில்நுட்ப மூலம் பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தை வெகுவாக குறைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் ஒரு மணி நேரத்திற்குள் ஏழுமலையான வழிபட தேவையான ஏற்பாடுகள் ஏ ஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்யப்படும் என்று ஒரு மாதத்திற்கு முன் தேவஸ்தான அறங்காவலர் குழு அறிவித்திருந்தது.
ஏஐ தொழில்நுட்பத்தை இறக்க முடியும்
தேவஸ்தானத்தின் இந்த முடிவிற்கு தேவையான ஏ ஐ தொழில்நுட்ப திறன் உடைய நிறுவனங்கள் தங்களை அணுகி செயல்முறை விளக்கம் அளிக்கலாம் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று ஏ ஐ தொழில்நுட்ப உதவியுடன் பக்தர்களுக்கு விரைவான சாமி தரிசன வாய்ப்பு அளிக்க தேவையான உபகரணங்கள், மென்பொருள்கள், டிஜிட்டல் ஸ்கிரீன் ஆகியவை உள்ளிட்டவற்றுடன் திருப்பதி மலைக்கு வந்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் ஆகியோருக்கு செயல்முறை விளக்கம் அளித்துள்ளது.
காத்திருப்பு நேரம் குறைய வாய்ப்பு
இலவச தரிசனத்திற்காக வந்து 20, 30 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை அதிகபட்சம் 3 மணி நேரம் ஆகவும், 300 ரூபாய் தரிசனத்திற்காக வந்து 4 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை ஒரு மணி நேரமாகவும் குறைக்க வேண்டும் என்பது தேவஸ்தானத்தின் இலக்கு. அதற்கு இந்த ஏஐ தொழில்நுட்பம் உதவும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
இந்த செயல்முறை விளக்கத்தைத் தொடர்ந்து, திருமலை திருப்பதில், பக்தர்களின் நேரம் சேமிக்கப்படுவதுடன், அவர்களின் காத்திருப்பு நேரம் கணிசமாக குறைக்கப்படும் என்றும் தெரிகிறது. பார்க்கலாம், இந்த நடைமுறை எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை.
டாபிக்ஸ்