Tiruchendur Temple: பக்தர்களுக்கு முருகனே வழங்கும் பிரசாதம் இது!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பன்னீர் இலையில் பிரசாதம் வழங்கப்படுகிறது.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் கோயில்களில் அறுபடை வீடுகள் மிகவும் சிறப்பாகும். அதில் திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும் சிறப்பாகும். அறுபடை வீடுகளில் இந்த திருக்கோயில் இரண்டாவது வீடாகும்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த கோயிலில் அமைந்துள்ள கொடி மரத்திலிருந்து வலது பக்கமாக எல்லா சன்னதிகளையும் தரிசனம் செய்து வந்தால் சுற்றுப்பாதை ஓம் என்ற வடிவில் அமைந்திருக்கும். இந்த கோயிலில் மேலும் சிறப்பு என்னவென்றால் இங்குத் தங்கக் குடங்கள் இருக்கின்றன.
இந்த தங்கக்கூடுங்கள் கோயிலின் வேள்வி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறும் காலத்தில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் தங்கத் தேங்காய்களும் உள்ளது எனக் கூறப்படுகிறது. இந்த தங்கத் தேங்காய்கள் கோயிலுக்கு வரும் முக்கியமான பிரமுகர்கள் மற்றும் பூரண கும்பம் மரியாதை கொடுக்கும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆலயத்தில் மட்டுமே பன்னீர் இலையில் வைத்து விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தப் பன்னீரில் முருகப்பெருமானின் பன்னிரு கரங்களைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இலையின் 12 நரம்புகள் பாய்வதைக் காணலாம்.
இந்த பிரசாதம் முருகப்பெருமான் தன் திருக்கரங்களால் வழங்குவதாக ஐதீகம். அதன் காரணமாகவே பன்னீர் இலையில் விபூதி பிரசாதமாகத் திருச்செந்தூர் கோயிலில் வழங்கப்படுகிறது.