Vastu: வீட்டில் டிவியை வாஸ்துப்படி எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu: வீட்டில் டிவியை வாஸ்துப்படி எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?

Vastu: வீட்டில் டிவியை வாஸ்துப்படி எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?

Marimuthu M HT Tamil
Feb 25, 2024 03:04 PM IST

டிவியை எந்தத் திசையைப் பார்த்து வைப்பது நல்லது, எங்கு வைப்பது நல்லது என்பது குறித்துக் காண்போம்.

வீட்டில் டிவியை வாஸ்துப்படி எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?
வீட்டில் டிவியை வாஸ்துப்படி எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?

பொதுவாக டிவியை வீட்டின் வெளியில் லிவ்விங் ஹாலில் வைக்கலாம். பெட் ரூமுக்குள் வைக்கக் கூடாது. ஏனெனில், பல நேரங்களில் அது தூக்கத்தைப் பாதிக்கும்.

குறிப்பாக, பெட்ரூமில் டிவியை வைக்கும்போது ஒருவர் தூங்கிக்கொண்டும்; ஒருவர் டிவி பார்த்துக்கொண்டும் இருந்தால் அது தூக்கத்தைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல், டிவியில் இருந்து வரும் சத்தங்கள், தூங்கிக்கொண்டிருப்பவரின் காதுகளுக்குள்போய், அது கனவுகளாக மாறும் அபாயம் உண்டு. எனவே, முடிந்தவரை பெட்ரூமில் டிவியை வைக்காமல் பார்த்துக்கொள்ளவும்.

தென்கிழக்குப்பகுதியில் டிவியை வைக்க சிறந்த இடமாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அப்படி இல்லையென்றால், வடமேற்குப் பகுதியில் டிவியை வைத்துக் கொள்ளலாம். பொதுவாக, மின்சார ஃபிளக் பாயின்ட்கள் வைப்பதுகூட, தென்கிழக்கு அல்லது வடமேற்குத்திசையில் வைக்கலாம் என வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அந்த முறைப்படி, டிவியை வைக்கலாம். எந்தப் பகுதியில் டிவியை வைக்கக் கூடாது?

1. தென்மேற்குப் பகுதியில் டிவியை வைக்கக் கூடாது.

2. வடகிழக்குப் பகுதியிலும் டிவியை வைக்கக் கூடாது.

இந்த இரண்டு விஷயங்களை மட்டும் கவனமாகத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அதன்பின், டிவியைப் பொருத்தும்போது அருகில் இருக்கும் ஜன்னல்கள் மூலம் வரும் வெளிச்சம், டிவியைப் பார்க்கமுடியாமல் செய்கிறதா என்பதை நன்கு ஒரு முறை ஆராய்ந்து பார்த்துக்கொள்ளவும். ஒருவேலை அப்படி இருந்தால், வெளிச்சம் வருவதற்குப் பாதிப்பு வராதவகையில் டிவியை வைக்கவேண்டும்.

இதைத்தாண்டி, டிவி கிழக்குத் திசையினைப் பார்த்தோ அல்லது வடக்குத் திசையினைப் பார்த்தோ வைப்பது நல்லது. இதன்மூலம் நல்ல பாஸிட்டிவ் சக்தி கிடைக்கும். அதேபோல், தென்கிழக்குப் பகுதியில் வைக்கும்போது, கிழக்குத்திசையில் அமர்ந்து பார்ப்பீர்கள்.

வடமேற்குத்திசையில் வைக்கும்போது, வடக்குப் பக்கம் அமர்ந்து நாம் டிவியைப் பார்ப்போம். இதன்மூலம் காற்று,வெளிச்சம் ஆகியவை எந்தவொரு சூழலிலும் தடைபடாது.

எனவே, டிவியை வைக்கும்போதுஇதுபோன்ற சில விஷயங்களைக் கருத்தில்கொள்ளவேண்டும். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்