Sani: அஷ்டமச்சனி காலகட்டத்தில் கடக ராசியினர் எப்படி இருக்க வேண்டும்? டிப்ஸ் இதோ!
அஷ்டமச்சனி காலகட்டத்தில் கடகராசியினர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விவரிக்கிறது, இக்கட்டுரை..
நவக்கிரகங்கள் 12 ராசியின்மீதும் சஞ்சரிக்கும்போது ஒவ்வொரு விதமான நன்மை, தீமைகள் கிடைக்கின்றன. சனி பகவான் கும்பராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் சனி பகவானின் பார்வை மேஷம், சிம்மம், விருச்சிக ராசியின் மீது விழுகிறது. திருநள்ளாறில் சனி பெயர்ச்சி வரும் டிசம்பர் மாதம் நிகழ்கிறது.
அஷ்டமச் சனி: கடக ராசியினரின் 8ஆம் வீட்டில் அஷ்டமச் சனி சஞ்சரிக்க இருக்கிறார். இக்கால கட்டத்தில் எதைப் பார்த்தாலும் ஆசை உருவாகும். ஒன்றைச் செய்வதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவேண்டும். இக்கால கட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். மேலும், அதிகமாக முதலீடு செய்யவேண்டாம். புதிய தொழில் ஆகியவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.
தந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இக்கால கட்டத்தில் வீண் செலவுகள், விரயச் செலவுகள் உண்டாகலாம். கடன் வாங்கினால் அடைக்கமுடியாது. கடக ராசி பெண்கள் கோபத்தைத் தவிருங்கள். ஒவ்வொரு வார்த்தையும் மிகுந்த எச்சரிக்கையுடன் பேசுதல் நலம். கணவன் - மனைவி இடையே வம்பு, வழக்குகள் வரலாம்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வரவேண்டும். அமாவாசை நாட்களில் குலதெய்வத்தை வணங்கினால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்