’தங்கமா? நிலமா? பணம் கொட்ட…!’ துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகள் செய்ய வேண்டிய முதலீடுகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’தங்கமா? நிலமா? பணம் கொட்ட…!’ துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகள் செய்ய வேண்டிய முதலீடுகள்!

’தங்கமா? நிலமா? பணம் கொட்ட…!’ துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகள் செய்ய வேண்டிய முதலீடுகள்!

Kathiravan V HT Tamil
Oct 16, 2024 06:00 AM IST

ஜோதிடத்தில் 4ஆம் இடம் என்பது முதலீடுகளை குறிக்க கூடிய இடமாக உள்ளது. ஒவ்வொரு லக்னத்திற்கும் 4ஆம் வீட்டின் அதிபதியை கொண்டே முதலீடு சார்ந்த வெற்றிகள் தீர்மானிக்கப்படுகின்றன.

’தங்கமா? நிலமா? பணம் கொட்ட…!’ துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகள் செய்ய வேண்டிய முதலீடுகள்!
’தங்கமா? நிலமா? பணம் கொட்ட…!’ துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகள் செய்ய வேண்டிய முதலீடுகள்!

துலாம் முதல் மீனம் லக்னங்கள் வரையிலான முதலீட்டு பலன்கள்

துலாம்

துலாம் லக்னத்திற்கு 4ஆம் அதிபதியாக சனி பகவான் உள்ளார். பழமையான சொத்துக்களில் முதலீடு செய்வது, கலை பொருட்கள் வாங்குதல், பழைய நாணயங்கள், பெட்ரோலிய துறை, இரும்பு, கழிவு மறுசுழற்சி சார்ந்த துறைகளில் செய்யும் முதலீடுகள் நன்மையை தரும். மேலும் தொழிலாளர்கள் சார்ந்த துறைகளில் முதலீடு செய்வது நன்மை தரும்.

விருச்சிகம் 

விருச்சிகம் லக்னத்தை பொறுத்தவரை கும்ப சனி 4ஆம் அதிபதியாக உள்ளார். எனவே பழமையான சொத்துக்களில் முதலீடு செய்வது, கலை பொருட்கள் வாங்குதல், பழைய நாணயங்கள், பெட்ரோலிய துறை, இரும்பு, கழிவு மறுசுழற்சி சார்ந்த துறைகளில் செய்யும் முதலீடுகள் நன்மையை தரும். இது மட்டுமின்றி ரகசிய தொழில்களில் செய்யும் முதலீடுகள் நன்மைகளை தரும். 

தனுசு

தனுசு லக்னத்திற்கு 4ஆம் அதிபதியாக குரு பகவான் வருகிறார். வெளிநாட்டு முதலீடுகள் இவர்களுக்கு நன்மைகளை தரும். வெளிநாட்டு கம்பெனிகளில் பங்கு முதலீடு செய்வது நல்லது. தங்கம், கல்வி சார்ந்த முதலீடுகள் நல்ல உயர்வை தரும். தங்கத்தை நீண்ட கால முதலீட்டுக்கு பயன்படுத்தலாம். வீடு கட்டி வாடகை விடுவதும் சிறப்பை தரும். 

மகரம் 

மகரம் லக்னத்திற்கு 4ஆம் அதிபதியாக செவ்வாய் பகவான் உள்ளார். ஆனால் பாதகாதிபதியாக செவ்வாய் உள்ளதால் பூமியால் ஆதாயம் பெற முடியாது. ஆனால் பாதுகாப்புத்துறை சார்ந்த முதலீடுகள், மருத்துவம், மருந்து தொழில்களில் முதலீடுகள் செய்வது நல்லது. தேவைக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது மகரத்திற்கு நல்லது அல்ல. சகோதர வர்க்கம் பாதகம் செய்ய வாய்ப்பு உள்ளதால் சகோதர வழி சொத்துக்களை வாங்க கூடாது. பூர்வீக சொத்துக்களை விட்டுக் கொடுப்பது நல்லது. ரத்தம் தொடர்புடைய துறைகள், சிவப்பு நிற பொருட்கள், கட்டுமானம் சார்ந்த தொழில்களில் முதலீடு செய்வது நல்லது. கால்நடை, விவசாயம் சார்ந்த தொழில்கள் உயர்வு தரும். 

கும்பம்

கும்பம் லக்னத்திற்கு 4ஆம் அதிபதியாக சுக்கிரன் உள்ளார். மனைவியின் பெயரில் முதலீடு செய்வது நன்மையை தரும். பெண்களுக்கு உபயோகம் தரும் தொழில், டைலரிங், ஜவுளி துறை சார்ந்த முதலீடுகள் வளர்ச்சியை தரும். மேலும் இவர்களின் முதலீடுகள் விரைவில் தீரும் அமைப்பு உள்ளதால் மிக கவனமாக இருக்க வேண்டும். 

மீனம்

மீனம் லக்னத்திற்கு 4ஆம் அதிபதி 7ஆம் இடத்தில் உச்சம் என்பதால் வாழ்கை துணை மீது முதலீடு செய்வது சிறப்புகளை தரும். கல்வி, அறிவுசார் சொத்துரிமை, எழுத்து, தணிக்கை, நிதி சார்ந்த துறைகளில் செய்யும் முதலீடுகள் நல்ல வளத்தை தரும்.  

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner