Thulam : வெற்றியை முத்தமிடும் துலாம் ராசியினரே.. ஆனந்த கண்ணீரில் மூழ்க போகும் நேரமிது.. இந்த பரிகாரத்தை செய்தாலே போதும்!-thulam kissing the success of libra it is time to drown in tears of joy just do this remedy - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Thulam : வெற்றியை முத்தமிடும் துலாம் ராசியினரே.. ஆனந்த கண்ணீரில் மூழ்க போகும் நேரமிது.. இந்த பரிகாரத்தை செய்தாலே போதும்!

Thulam : வெற்றியை முத்தமிடும் துலாம் ராசியினரே.. ஆனந்த கண்ணீரில் மூழ்க போகும் நேரமிது.. இந்த பரிகாரத்தை செய்தாலே போதும்!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 20, 2024 03:40 PM IST

Thulam : அஷ்டம ஸ்தானத்தில் பார்த்தீங்கன்னா குரு அமைந்திருக்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் அமைந்திருக்கிறார். லாப ஸ்தானத்தில் சூரிய பகவான், புதன் சேர்ந்து அமைந்திருக்கிறார்கள். ஆயன, சயன போக ஸ்தானத்தில் சுக்கிரனும், கேதுவும் அமைந்திருக்கிறார்கள்.

Thulam : வெற்றியை முத்தமிடும் துலாம் ராசியினரே.. ஆனந்த கண்ணீரில் மூழ்க போகும் நேரமிது.. இந்த பரிகாரத்தை செஞ்சாலே போதும்!
Thulam : வெற்றியை முத்தமிடும் துலாம் ராசியினரே.. ஆனந்த கண்ணீரில் மூழ்க போகும் நேரமிது.. இந்த பரிகாரத்தை செஞ்சாலே போதும்!

துலாம் ராசியினரின் குண நலன்கள்

பொதுவாகவே மற்றவர்கள் மீது அன்பு செலுத்தக்கூடிய எண்ணம் உடையவர்கள். மத்தவர்களின் கஷ்டங்களை தன் கஷ்டமாக எடுத்துக்கொள்வார்கள். நன்மனதோடு இருக்கக்கூடிய ராசிக்காரர் மற்றவர்களின் முழுமையாக பெற நினைப்பவர்கள்.

இது நாள் வரை துலாம் ராசிக்கார்களுக்கு வாழ்க்கையில துன்பத்துக்கு பஞ்சமே இருக்காது. எல்லா திசையில இருந்தும் உங்களுக்கு துன்பங்கள் வந்துகிட்டே இருக்கும் சரி குடும்பத்தகுள்ளும் பிரச்சனை, வேலை பார்க்கக்கூடிய இடங்களுக்கு சென்றால் அங்கேயும் பிரச்சனை, சக ஊழியர்களிடம் பிரச்சனை, மேலதிகாரியிடம் பிரச்சனைன்னு வந்துகிட்டே இருக்கும். தொழில் செய்யக்கூடிய இடங்களில் நஷ்டமாகும். இதற்கிடையில் எப்போதாவது லாபம் பெறக்கூடிய சந்தோஷம் உங்களுக்கு கிடைத்திருக்கும். திருமண வாழ்க்கையில் ஒரு சில சண்டைகள் நீங்கி சந்தோஷங்கள் கிடைத்திருக்கும் உங்களுடைய வாழ்க்கையில நீங்கள் எதை நோக்கி பயணம் செய்தீர்களோ அதற்கான வெற்றி சில நேரங்களில் கிடைத்திருக்கும். மற்றபடி மிகவும் கடினமான காலமாகவே இருந்திருக்கும்.

செப்டம்பர் 17 க்கு பின் துலாம் ராசி பலன்கள்

துலாம் ராசியினுடைய ராசி அதிபதியாக சுக்கிர பகவான் அமைந்திருக்கிறார். துலாம் ராசியினுடைய ராசி அதிபதி சுக்கிர பகவான் அமைந்திருப்பது உங்களுடைய வாழ்க்கையில நன்மைகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.

அஷ்டம ஸ்தானத்தில் பார்த்தீங்கன்னா குரு அமைந்திருக்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் அமைந்திருக்கிறார். லாப ஸ்தானத்தில் சூரிய பகவான், புதன் சேர்ந்து அமைந்திருக்கிறார்கள். ஆயன, சயன போக ஸ்தானத்தில் சுக்கிரனும், கேதுவும் அமைந்திருக்கிறார்கள். பஞ்சம ஸ்தானத்தில் சனி வக்கிர நிலையில் அமைந்திருக்கிறார். பிராண, ரோன ரோக ஸ்தானத்தில் ராகு வலம் வருகிறார்.

எப்போதும் சிந்தனையுடனும் ஏதாவது மனதில் குழப்பத்துடனும் இருக்கக்கூடிய துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கையில எதையாவது செயல்படுத்தி வெற்றி பெற நினைத்தால் அதற்கான கால நேரங்கள் இருக்கிறது. இந்த மாதம் ராசி நாதனாக இருக்கக்கூடிய சுக்கிர பகவான் ராசியில் ஆட்சி பெற்று பலமாக அமைந்திருக்கிறார். எதிலும் முன்னேற்றம் காணப்படும். நீங்கள் விரும்பிய பொருட்கள் எல்லாம் வாங்கி மகிழ்வீர்கள் முக்கிய நபர்களிடம் அறிமுகமாகவும் உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலமா உதவிகள் கிடைக்கும் திட்டமிட்டபடி காரியங்கள் எல்லாம் நடக்கும் .

தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி சிறப்பாகவே இருக்கும். பணவரவு அதிகரிக்கும் பழைய கடன்கள் எல்லாமே திருப்பிச் செலுத்தக்கூடிய நிலை உண்டாகும் நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியான சிரமங்களில் இருந்து விடுபெறுவீர்கள். உத்தியோகத்தில் நிலை மாறுபடும். அரசாங்கம் அலுவலகம் வழியாக வரக்கூடிய நன்மைகள் உங்களுக்கு எளிமையில் கிடைக்கும். குடும்பத்திலிருந்து வந்த குழப்பங்கள் கொஞ்சம்.

சில திருமண வாய்ப்புகள் கைகூடி வரும் கணவன் மனைவிக்கான நெருக்கம் ஏற்படும் பிள்ளைகளால் நன்மைகள் பெருக ஆரம்பித்துவிடும் இந்த மாதமானது இந்த துலாம் ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சிறப்புகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கு முக்கியமாக இந்த மாதத்துல 17 ஆம் தேதிக்கு பிறகு உங்களுடைய வாழ்க்கையில முழுமையான மாற்றங்கள் என்பது இருக்கும். இந்த மாதம் முடிவதற்குள்ள பல நன்மைகள் உங்களுடைய வாழ்க்கையில நடக்க இருக்கிறது. அதனால கவலையே படாதீங்க எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சரி நீங்கள் உங்களுடைய முயற்சிகளை கைவிட வேண்டாம் நிச்சயம் உங்களுக்கான காலங்கள் என்பது நெருங்கிவிட்டது உங்களுடைய வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி நன்மைகள் நடக்கப்போகுது

நட்சத்திரங்கள் பலன்கள்

சித்திரை

இந்த மாதத்தில் உங்களுடைய வாழ்க்கையில மனதிலிருந்து வந்த காரணமில்லாத வருத்தங்களும், குழப்பங்களும் கொஞ்சம் மறையும். பணம் கொஞ்சம் அதிக அளவில் உங்களை வந்து சேர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இந்த மாதத்தில் நீங்கள் நினைத்தது போல் விஷயங்கள் நடப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு உங்களால் அதிக லாபங்கள் இருப்பது உறுதி

சுவாதி

உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். பிள்ளைகளால் சந்தோஷங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும். உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய குடும்பத்தார்களுக்கு ஏதாவது உடல் நலக் கோளாறுகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

விசாகம் 

உறவினர்களுடன் பரிமாற்றங்கள் செய்யும் பொழுது மிகுந்த எச்சரிக்கையை தேவை முயற்சிகள் தடை வந்தாலும் அதை முறித்து வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். உங்களுடைய குடும்பத்துக்குள்ள இருந்த மோதல்கள் கொஞ்சம் விலகும். ஆனாலும் சண்டை சச்சரவுகள் என்பது இருக்கத்தான் செய்யும். அதனால் கொஞ்சம் நீங்கள் பார்த்து இருக்கக்கூடிய காலகட்டமாக இருக்கிறது.

இந்த நாட்களில் பரிகாரங்கள்

வெள்ளிக்கிழமை தோறும் சிவன் கோவிலில் உள்ள நவகிரக சந்நிதியை ஒன்பது முறை சுற்றி வாருங்கள். இதனால் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்களையும் கஷ்டங்களையும் நீக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்