Sani Peyarchi: மீனத்தில் கொட்டிக் கொடுக்கும் சனி.. பிடித்து ஆட்டப் போகும் ராசிகள்.. தனபாக்கியம் உண்டு..!
Sani Peyarchi: சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் சொர்க்க யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

Sani Peyarchi: நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர் சனி பகவான். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் கொடுத்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் தற்போது சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு சனிபகவான் தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவான் வரும் மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கிறார். இது குருபகவானின் சொந்தமான ரசியாகும். சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் சொர்க்க யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
ரிஷப ராசி
சனி பகவானின் இடமாற்றம் உங்களுக்கு 2 1/2 ஆண்டு காலம் யோகத்தை கொடுக்கப் போகின்றது. மங்களகரமான யோகம் உங்களுக்கு கிடைக்கும். பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கக்கூடும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
துலாம் ராசி
சனி பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் கிடைக்கப் போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செல்வத்தில் அதிகரிப்பு இருக்கும். உரிய நேரத்தில் நீங்கள் கேட்ட அனைத்து விஷயங்களும் கிடைக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மகர ராசி
சனி பகவானின் ஆசீர்வாதத்தால் உங்களுக்கு இரண்டரை ஆண்டுகாலம் அவர் பணம் மழையை கொடுக்கப் போகின்றார். அதிக பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
குடும்ப உறுப்பினர்களால் நல்ல நேரத்தை உருவாக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும். தொழிலில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க கூடும். திருமண பாக்கியம் கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
