குருவின் நட்சத்திரப் பெயர்ச்சி.. கனவு நனவாகி இழந்த பணத்தை மீட்கப்போகும் மூன்று ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குருவின் நட்சத்திரப் பெயர்ச்சி.. கனவு நனவாகி இழந்த பணத்தை மீட்கப்போகும் மூன்று ராசிகள்

குருவின் நட்சத்திரப் பெயர்ச்சி.. கனவு நனவாகி இழந்த பணத்தை மீட்கப்போகும் மூன்று ராசிகள்

Marimuthu M HT Tamil
Nov 17, 2024 07:57 PM IST

குருவின் நட்சத்திரப் பெயர்ச்சி.. கனவு நனவாகி இழந்த பணத்தை மீட்கப்போகும் மூன்று ராசிகள் குறித்துக் காண்போம்.

குருவின் நட்சத்திரப் பெயர்ச்சி.. கனவு நனவாகி இழந்த பணத்தை மீட்கப்போகும் மூன்று ராசிகள்
குருவின் நட்சத்திரப் பெயர்ச்சி.. கனவு நனவாகி இழந்த பணத்தை மீட்கப்போகும் மூன்று ராசிகள்

குரு பகவான் வருடத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறது. குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் சஞ்சரித்து வருகிறார். இருந்தாலும், குரு பகவான் அவ்வப்போது தங்கள் நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார்.

குரு பகவானின் நட்சத்திரமாற்றத்தால் அனைத்து ராசிகளும் பாதிக்கப்படுகின்றன. நவம்பர் மாத கடைசி நாட்களில் குரு பகவான் மிருகசீரிட நட்சத்திரத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்.

அதன்படி, வரும் நவம்பர் 28ஆம் தேதி நண்பகல் 1:10 மணிக்கு குரு பகவான் சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். மேலும், குரு பகவான் 10.04.2025 வரை இந்த நட்சத்திரத்தில் பயணிப்பார். இந்த ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் ஆகும். குருவின் இந்த நட்சத்திரப்பெயர்ச்சி, சில ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது.

ரோகிணி நட்சத்திரத்தில் குருவின் பெயர்ச்சி, எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் என்பது குறித்துப் பார்ப்போம்.

ரோகிணி நட்சத்திரத்துக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆவதால் நன்மைபெறும் ராசிகள்:

துலாம்:

குரு பகவானின் ரோகிணி நட்சத்திரப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மையைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பெயர்ச்சி மூலம் துலாம் ராசியினரின் பொருளாதாரச் சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் பணநெருக்கடி நீங்கும். அதே நேரத்தில் உங்கள் அறிவால் உங்கள் செயல்திறனை மேம்படுத்துவீர்கள். உங்கள் துணைக்கு நேரம் ஒதுக்குங்கள். திடீர் பணவரவு உண்டாகும். நீண்ட நாள்கள் எதிர்பார்த்த கனவு நனவாகும்.

கடகம்:

குரு பகவானின் ரோகிணி நட்சத்திரப்பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. உங்கள் வியூகம் வரும் காலத்தில் வெற்றிபெறும். வேலைக்காக சில இடங்களுக்குப் பயணம் செய்ய நேரிடும். ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். வியாபாரத்தில் இழந்த பணம் திரும்பக் கிடைக்கும். கடக ராசியின் பதினோராவது வீட்டில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். இது அதிர்ஷ்ட வீடாக கடக ராசிக்குக் கருதப்படுகிறது. வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பொதுச் சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புதிதாக வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் மற்றும் சைடு பிஸினஸ் வாய்ப்புகள் உருவாகும்.

சிம்மம்:

குரு பகவானின் ரோகிணி நட்சத்திரப்பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு உகந்தது ஆகும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். ஒரு நல்ல திட்டம் வியாபாரத்தில் லாபத்தைத் தரும். உங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும். ஜங்க் உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பண ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தாயை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். புதிய தொழில் தொடங்க இதுவே சரியான நேரம். வெளிநாட்டில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்