Sukra Mega Luck: நீங்கதான் அந்த அதிர்ஷ்ட ராசியா?.. சுக்கிர பெயர்ச்சியில் சுழன்ற ராசிகள்.. பணக்கார வாழ்க்கை கிடைக்குமா?
Sukra Mega Luck: சுக்கிரனின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ஜோதிட சாஸ்திரத்தின் படி யோகத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Sukra Mega Luck: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Feb 16, 2025 10:33 PMTrigrahi Yogam : சிவராத்திரிக்குப் பின் எந்த 3 ராசிக்காரர்களுக்கு கடினமான காலமாக இருக்கலாம் பாருங்க.. வேலையில் கவனம்!
Feb 16, 2025 01:26 PMMercury in Pisces : மீன ராசியில் புதன்.. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் என்ன பலன்.. இதோ பாருங்க!
Feb 16, 2025 07:00 AMRahu Horoscope: ராகு 2025-ல் கும்பத்தில் நுழைகிறார்.. 3 ராசிகள் வாழ்க்கை என்ன ஆகப்போகுது தெரியுமா.. வாங்க பார்க்கலாம்
Feb 16, 2025 05:00 AMToday Rasipalan : ‘வெற்றி தேடி வரும்.. கோபம் வேண்டாம்.. வேலையில் கவனம் மக்களே’ இன்று பிப்.16 ராசிபலன் இதோ!
Feb 15, 2025 11:24 AMLove Horoscope : இன்று எந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்? யார் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?
Feb 15, 2025 11:21 AMMoney Luck: அதிர்ஷ்ட கதவை திறக்கும் குரு.. மங்கள யோகத்தை பெற்ற ராசிகள்.. 2025 ஆம் ஆண்டு யோகம் தான்!
சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் நிறைய யோகத்தை கொடுக்கக் கூடியவர். சுக்கிரன் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.
அந்த வகையில் சுக்கிரன் வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி அன்று மீன ராசிக்கு செல்கிறார். இது குரு பகவானின் சொந்தமான ராசியாகும். சுக்கிரனின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ஜோதிட சாஸ்திரத்தின் படி யோகத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
ரிஷப ராசி
உங்கள் ராசிகளின் அதிபதியாக சுக்கிரன் விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் உங்களுக்கு தற்போது சாதகமாக அமைந்துள்ளது. திருமண வாழ்க்கையில் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. பணத்தை சேமிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிரிகளால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
கடக ராசி
சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு பணயோகத்தை தருவதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தால் உங்களுக்கு மன நிம்மதி ஏற்படும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. திடீர் நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு ஒற்றுமை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பயணங்கள் நல்ல பலன்களை கற்றுத் தரும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். மாணவர்கள் கல்வி சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் வெற்றி பெற்று நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
சிம்ம ராசி
சுக்கிரனின் இடமாற்றத்தால் உங்களுக்கு பணக்கார யோகம் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரலாம். பழைய முதலீடுகளால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கக்கூடும். திடீர் பணவரவு உண்டாகக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பொருளாதாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். காதல் வாழ்க்கை உங்களுக்கு முன்னேற்றம் அடையும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
