Budhan Transit: கோடிகளோடு வரும் புதன்.. பண மழையில் நனையும் ராசிகள் யார்?.. அதிர்ஷ்டம் உங்களுக்கு தானா?
Budhan Transit: புதன் பகவானின் இந்த இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பணக்கார யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Budhan Transit: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் ஒரு மாதத்திற்கும் குறைவாக தனது இடத்தை மாற்றக்கூடியவர். மிகவும் குறுகிய காலத்தில் நவகிரகங்களில் தங்களது இடத்தை மாற்றக்கூடிய கிரகங்களில் முதன்மை இடத்தில் வகிப்பவர்.
புதன் பகவான் இருப்பினும் புதன் பகவானின் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். புதன் பகவான் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி, புத்திசாலித்தனம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் புதன் பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு தொடங்கிய உடனே தனது இடத்தை மாற்றி விட்டார்.
கடந்த ஜனவரி 4-ம் தேதி அன்று புதன் பகவான் தனுசு ராசியில் இடம் மாறினார். புதன் பகவானின் இந்த இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பணக்கார யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
சிம்ம ராசி
புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு யோகத்தை பெற்று தரப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை முன்னேற்றம் அடையும். மாணவர்கள் பல்வேறு சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
கன்னி ராசி
புதன் பகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு பயனுள்ள வாழ்க்கை அமையப் போகின்றது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகளும் நல்ல லாபத்தை பெற்று தரும். வணிகத்தில் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
துலாம் ராசி
புதன் பகவானின் நடமாற்றம் உங்களுக்கு பணக்கார யோகத்தை பெற்று தர போகின்றது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு இரட்டிப்பான லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
