Guru Trikona Yoga: குரு வெற்றிகள் குவியல்.. வக்கிர நிவர்த்தி.. தொழில் வளர்ச்சி ராசிகள்.. முக்கோண யோகம் வருது!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Trikona Yoga: குரு வெற்றிகள் குவியல்.. வக்கிர நிவர்த்தி.. தொழில் வளர்ச்சி ராசிகள்.. முக்கோண யோகம் வருது!

Guru Trikona Yoga: குரு வெற்றிகள் குவியல்.. வக்கிர நிவர்த்தி.. தொழில் வளர்ச்சி ராசிகள்.. முக்கோண யோகம் வருது!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 16, 2025 02:31 PM IST

Guru Trikona Yoga: குருபகவான் நேரான பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Trikona Yoga: குரு வெற்றிகள் குவியல்.. வக்கிர நிவர்த்தி.. தொழில் வளர்ச்சி ராசிகள்.. முக்கோண யோகம் வருது!
Guru Trikona Yoga: குரு வெற்றிகள் குவியல்.. வக்கிர நிவர்த்தி.. தொழில் வளர்ச்சி ராசிகள்.. முக்கோண யோகம் வருது!

குரு பகவான், செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

குரு பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான்காம் தேதி அன்று வக்கிர நிபர்த்தி அடைக்கின்றார். குருபகவான் நேரான பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் குரு பகவான் இரண்டாவது வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். இதனால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிறைய நன்மைகள் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினரோடு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் வக்கிரன் நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கக்கூடும். தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நிறைய லாபங்கள் கிடைக்கக்கூடும். புதிய திட்டங்கள் உங்களுக்கு வெற்றி தரும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக மாறும். காதல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும் பண வரவு அதிகரிக்கும்.

விருச்சிக ராசி

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் குருபகவான் வக்கிர நிபர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். மகத்தான வெற்றி உங்களை தேடி வரும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். வணிகத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நிதிநிலைமை உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Whats_app_banner