தமிழ் செய்திகள்  /  Astrology  /  Three Zodiac Signs That Will Be Blessed By The Sun-mars Conjunction In Capricorn

Capricorn: மகர ராசியில் இறுக்கி அணைக்கும் சூரியன் - செவ்வாய்.. சூப்பராக வெல்லும் 3 ராசிகள்

Marimuthu M HT Tamil
Jan 08, 2024 03:56 PM IST

மகர ராசியில் சூரியன் மற்றும் செவ்வாய் சேர்க்கையினால் அதிர்ஷ்டம்பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

மகர ராசியில் இறுக்கி அணைக்கும் சூரியன் - செவ்வாய்.. சூப்பராக வெல்லும் 3 ராசிகள்
மகர ராசியில் இறுக்கி அணைக்கும் சூரியன் - செவ்வாய்.. சூப்பராக வெல்லும் 3 ராசிகள்

ட்ரெண்டிங் செய்திகள்

சனி பகவானுக்குரிய மகர ராசியில் சூரியன், செவ்வாய் ஒன்று சேர்வதால் மூன்று ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றன.

மேஷம்: இந்த ராசியின் பத்தாம் வீட்டில், செவ்வாய் மற்றும் சூரிய சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் மேஷ ராசியினர் அனைவருக்கும் தொட்டது அனைத்தும் துலங்கும். கெட்டது விலகும். இக்கால கட்டத்தில் ஆர்வமுடன் மேஷ ராசியினர் பணியாற்றுவர்.

இதனால் பணியிடத்தில் புரோமோஷன் பெற்று வெளிநாடு செல்லும்யோகம் வாய்க்கலாம். வெகுநாட்களாக கணவன் - மனைவி இடையே இருந்த ஈகோ பிரச்னைகள் நீங்கி பரஸ்பர மரியாதை கூடும்.

ரிஷபம்: இந்த ராசியின் 9ஆம் வீட்டில் இந்த சேர்க்கை நடைபெறுவதால், கடவுள் மீதான நம்பிக்கை அதிகமாகும். தந்தை மகன் இடையேயான வாக்குவாதங்கள் குறையும்.

தொழில் செய்பவர்களுக்கு இருந்த சுணக்கம் நீங்கி நல்ல லாபம் கிடைக்கும். வங்கியில் சேமிப்புக்கணக்கில் பணவரவு அதிகரிக்கும். வெகுநாட்களாக உறவினர்களிடையே இருந்த அவப்பெயர் நீங்கும்.

சிம்மம்: இந்த ராசியின் 6ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளதால் அரசு தேர்வுக்கு படித்து வருபவர்களுக்கு, இந்தாண்டு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புண்டு. பணியிடத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், வியாபாரிகளுக்கு கணிசமான லாபமும் அதிகரிக்கும். வீட்டில் வெகுநாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்குவீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்