Luck Rasis: விருச்சிகத்துக்குள் புகுந்திருக்கும் யோகம்.. மச்சம்பெற்ற ராசிக்காரர்கள்
திரிகிரஹி யோகத்தால் நன்மை பெறும் மூன்று ராசிகள் குறித்து காண்போம்.
நவகிரகங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும்போது பல்வேறு யோகங்கள் உருவாவது இயல்பானது தான்.
அதன்படி,வரும் மாதத்தில் விருச்சிக ராசியில் அபூர்வ திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. அதன்படி, விருச்சிகத்தில் சூரியன், செவ்வாய், புதன் ஆகியவை சஞ்சரிப்பதால் 5 ஆண்டுகளுக்குப் பின் இந்த அபூர்வ திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது. இதனால் 3 ராசியினர் அற்புதமானப் பலன்களைப் பெறுகின்றனர். குறிப்பாக சிம்மம், மகரம், கும்ப ராசியினர் திரிகிரஹி யோகத்தால் சுப பலன்களைப் பெறுகின்றனர்.
சிம்மம்: இந்த திரிகிரஹி யோகத்தால் சிம்ம ராசியினருக்கு தொழிலில் மிகச்சிறந்த வாய்ப்புகள் உருவாகலாம். பொதுசமூகத்தில் தங்களுக்கு என்று ஒரு பெயர் கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள், பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்யும் நபர்களுக்குக் கூடுதல் லாபம் கிடைக்கும். பூமி, புது வாகனம் வாங்கும் சூழல் ஏற்படும்.
மகரம்: இந்த ராசியினருக்கு திரிகிரஹி யோகத்தால் உங்கள் வங்கிக்கணக்கில் கூடுதலாக சேமிப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் சைடு பிசினஸை செய்வீர்கள். உங்களது முதலீடுகள் அனைத்தும் நல்ல லாபத்தை ஈட்டித்தரும். கிடைக்காமல் இருந்த பணம் கை வந்து சேரும்.
கும்பம்: இந்த ராசியினருக்கு திரிகிரஹி யோகத்தால் தொழிலில் ஓரளவு நல்ல லாபம் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு இத்தனை நாட்களாக கிடைக்காமல் இருந்த அங்கீகாரம் கிடைக்கும். வெகுநாட்களாக வேறுவேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய நல்ல வேலை கிடைக்கும். சகப் பணியாளர்கள் இடையே ஒத்துழைப்பு, பரஸ்பரம் கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்