வீச்சுடன் கும்பத்தில் நேரடியாக இயங்கும் சனி பகவான்.. மூச்சுமுட்டியவர்களுக்கு கிடைக்கும் நிம்மதிப்பெருமூச்சு
வீச்சுடன் கும்பத்தில் நேரடியாக இயங்கும் சனி பகவான்.. மூச்சுமுட்டியவர்களுக்கு கிடைக்கும் நிம்மதிப்பெருமூச்சு குறித்து காண்போம்.
ஜோதிடத்தில், சனி பகவானுக்கு நீதிபதி மற்றும் ஒருவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலனையும் தண்டனையையும் கொடுப்பவர் என்ற அந்தஸ்து பெற்றவர்.
கும்ப ராசி சனி பகவானுக்கு சொந்தமான ராசியாகும். தற்போது சனி பகவான் கும்ப ராசியில் அமர்ந்து நேர் பாதையில் சஞ்சரித்து வருகிறார்.
சனி பகவானின் சுபநிலை சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். கடந்த நவம்பர் 15ஆம் தேதி முதல் கும்ப ராசியில் சனி பகவான் பெயர்ச்சி அடைந்திருக்கிறார்.
பஞ்சாங்கத்தின்படி, சனி பகவான் வரும் ஜூலை 12, 2025ஆம் தேதி வரை நேரடி இயக்கத்தில் செல்லக்கூடியவர். கும்ப ராசியில் சனியின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்கள் பலன் பெறுவார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம்
கும்பத்தின் சனி பகவான் நேரடியாக சஞ்சரிப்பதால் நன்மைபெறும் ராசிகள்:
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு, கும்ப ராசியில் சனி பகவானின் நேரடி இயக்கம் பாதை மிகவும் நன்மை பயக்கும். சனி பகவானின் சுப பலனால் இத்தனை நாட்களாக இருந்த காரியத்தடை நீங்கி, காரியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். திருமண வாழ்க்கை காதலும் அந்நியோன்யமும் நிறைந்ததாக இருக்கும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலான பிணைப்பு வலுவாக இருக்கும். நிதி நிலைமையும் நன்றாக இருக்கும். இதற்கு முன் நீங்கள் கடன் வாங்கி இருந்தால் இந்தக் காலத்தில் கடனை அடைப்பதற்கு உண்டான தொழில் வழி வகைகளை சனி பகவான் ஏற்படுத்தித் தருவார்.
துலாம்:
கும்ப ராசியில் சனியின் நேரடி சஞ்சாரத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மையே கிட்டும். நீங்கள் பல வருவாய் ஆதாரங்களில் இருந்து பணத்தைச் சம்பாதிக்கலாம். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் விலகி, அவர்களின் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தொழிலில் உங்கள் திறமையால் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவும் மேம்படும். இதற்கு முன் நீங்கள் செய்த தவறுகளுக்கு மனதார மன்னிப்புக்கேளுங்கள். இந்தக் காலத்தில் பொறுமையும் பொறுப்பும் ஒரு துளியாவது அதிகரித்து இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியில் சனி பகவானின் நேரடி பெயர்ச்சியால், இத்தனை நாட்களாக கும்ப ராசியினருக்கு இருந்த சிக்கல்கள் விலகும். வருங்காலம் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். வரப்போகும் ஆண்டில் நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். ஒவ்வொரு காரியத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். கும்ப ராசியில் தொழிலில் இருந்த பிரச்னைகள் நீங்கி அதிர்ஷ்டமும் கிட்டும். நீங்கள் மிகவும் பாசிட்டிவ் ஆக உணர்வீர்கள். மாணவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். இந்தக் காலத்தில் நல்ல முறையில் படித்தால் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். உங்களை இத்தனை நாட்களாக கெட்டவர்கள் என்று நினைத்தவர்கள்கூட உங்களின் அடிமனதில் இருக்கும் நல்ல எண்ணங்களைக் கண்டு மனம் மாறுவர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்
டாபிக்ஸ்