Devapiran temple: மொட்டை கோபுர பெருமாள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Devapiran Temple: மொட்டை கோபுர பெருமாள்!

Devapiran temple: மொட்டை கோபுர பெருமாள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 14, 2022 06:25 PM IST

தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஸ்ரீதேவர்பிரான் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.

ஸ்ரீதேவர்பிரான் திருக்கோயில்
ஸ்ரீதேவர்பிரான் திருக்கோயில்

இக்கோயிலில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இரண்டு பிரகாரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் திருமகள் மற்றும் பூதேவியுடன் காட்சி அளிக்கிறார். இந்த கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. இங்குள்ள தலவிருட்சம் விலா மரம் ஆகும். இந்த கோயிலில் பத்மாவதி தாயார் திருமலை மார்பில் தாங்கி இருக்கிறார்.

இந்த கோயிலில் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் இங்கு நியரா ஜெயம் செய்து பூஜை நடத்தினால் வேண்டும் வரம் கிடைக்கும். இந்த கோயிலில் வழங்கப்படும் மஞ்சள் காப்பு மிகவும் விசேஷமாகும். தீராத நோய்களை தீர்க்க இங்கு வந்து மஞ்சள் காப்பு பெற்று செல்கிறார்கள் பக்தர்கள்.

இந்த திருத்தலத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடக்கும். அப்போது பகவான் சயன கோலத்தில் இருப்பார். புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விசேஷமானது. இதில் கடைசி சனிக்கிழமை இரட்டை திருப்பதியில் உள்ள இரண்டு உற்சவர் ஒன்று கூடி தேவர் கோயிலை சுற்றி கருட சேவை நடத்துவது சிறப்பான காட்சியாகும். 

கார்த்திகை மாதம் அஸ்த நட்சத்திரத்தில் பிரமோற்சவம் விழா 11 நாட்கள் நடக்கும். இக்கோயிலில் காலை 8 மணி முதல் ஒரு மணி வரைக்கும் மதியம் 2 மணியிலிருந்து மாலை 5.15 மணி வரைக்கும் நடை திறந்திருக்கும்.

Whats_app_banner