தமிழ் செய்திகள்  /  Astrology  /  This Year First Solar Eclipse Will Impact These 3 Rasis And Bad Time For Them

Solar Eclipse Impact Rasis: மீன ராசியில் நிகழும் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்! உஷாராக இருக்க வேண்டிய 3 ராசிகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 20, 2024 05:44 PM IST

ஹோலி பண்டிகை நாளில் சந்திர கிரகணம் நடைபெற இருக்கும் நிலையில், அன்றிலிருந்து சரியாக 15வது நாளில் சூரிய கிரகணம் ஒன்று ஏற்பட இருக்கிறது. சுமார் 70 ஆண்டுகள் கழித்து இந்த சூரிய கிரகணமானது நிகழ்கிறது.

சூரிய கிரகணத்தால் மோசமான நேரத்தை சந்திக்க இருக்கும் ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்
சூரிய கிரகணத்தால் மோசமான நேரத்தை சந்திக்க இருக்கும் ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. சுமார் 7 நிமிடங்கள் 30 விநாடிகள் வரை நீடிக்கும் என வானியலாளர்கள் கூறுகிறார்கள். கிரகணம் நிகழும் 7 நிமிடங்களில் அவை ஏற்படும் இடங்களில் பகல் பொழுது இருளாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. இதன் காரணமாக இந்தியாவில் இதற்கு எவ்வித முக்கியத்துவமும் இருக்காது.

அதேசமயம் அமெரிக்காவில் கிரகணம் தெளிவாகி தெரியும் எனவும், குறிப்பாக வட அமெரிக்க பகுதிகளில் பார்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த சூரிய கிரகணத்துக்கு பிறகு 2030 வரை இதுபோன்ற சூரிய கிரகணம் நிகழாது எனவும் கூறப்படுகிறது.

சூரிய கிரகணம் ஏப்ரல் 8இல், இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1.25 மணி வரை நீடிக்கிறது. 

இந்த சூரிய கிரகணமானது மீன ராசியில் நிகழ இருக்கிறது. அதாவது மீனம் மற்றும் ரேவதி நட்சத்திரத்தில் இந்த கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணம் முழு சூரிய கிரகணமாக இருக்கும். 

சூரிய கிரகணத்தின் போது சூரியனில் இருந்து தீங்கு விளைவிக்கும் கதிர்கள் வெளிப்படும் எனவும், இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது தவறான விஷயங்கள் எதையும் செய்யகூடாது. கிரகணத்தின்போது  சூரியனில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் மற்றும் எதிர்மறை ஆற்றல் பல்வேறு வகைகளில் தீங்குகளை விளைவிக்கலாம்

சூரிய கிரகணத்தின் விளைவாக 12 ராசிகளிலும் தாக்கம் ஏற்படும். சூரிய கிரகணத்தின் விளைவாக மூன்று ராசியினரின் வாழ்க்கையில் சில பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தலாம். சூரிய கிரகணம் காரணமாக எந்தெந்த ராசிகளுக்கு தாக்கம் ஏற்படும் என்பதை பார்க்கலாம்

விருச்சிகம்

2024ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் விருச்சிக ராசியினருக்கு சாதகமற்றதாக சூழ்நிலையை கொண்டிருக்கும். இந்த நேரம் கடினமானதாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் அதிகரிக்கலாம். வியாபாரத்தில், தொழிலில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் மிகவும் கவனமாக சிந்திக்க வேண்டும். மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் காரணமாக நல்ல பலன் கிடைக்காது. தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பிரச்னைகள் அதிகரிக்கும். மனநலமும் பாதிப்படையும். இந்த காலகட்டத்தில் பயணம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்கவும். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ரிஷப ராசியினருக்கு ஏற்ற காலமாக அமையவில்லை. எதிர்பார்த்த சில விஷயங்கள் தாமதத்தில் முடியும். நிதி ரீதியாக செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கையில் பல்வேறு சிரமங்கள் சந்திக்க நேரிடும். தேவையற்ற மோதல்களை தவிர்க்கவும். இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

சூரிய கிரகணத்தால் நன்மை பெறும் ராசிகள்

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி மற்றும் தனுசு ராசியினருக்கு நன்மை தருவதாக உள்ளது. வருமானம் அதிகரித்து, செல்வத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடங்களிலும் திருப்தி அளிக்கும் சூழ்நிலை அமையும். நல்ல செய்திகள் கிடைக்கும்.

வெளியூர் செல்ல விரும்புபவோரின் விருப்பம் இந்த நேரத்தில் நிறைவேறும். முன்னேற்றத்துக்கான பாதைகள் உருவாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு திடீர் பண வரவு உண்டு. வெற்றியை எண்ணுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்