Chandrashekara Saraswati Swamigal: 'இந்த உலகமும் ஒரு கனவுதான்'-காஞ்சி மகாபெரியவா அவதரித்த தினம் இன்று
Chandrashekara Saraswati Swamigal: இவருக்கு பெற்றோர் வைத்தப்பெயர் ஸ்வாமிநாதன். இவருக்கு உபநயணம் 1905 ஆம் ஆண்டில் திண்டிவனத்தில் நிகழ்த்தப்பட்டது, அவர் வேதங்களை நன்கு அறிந்தவர். அவரது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பூஜைகள் செய்யத் தொடங்கினார். 'இந்த உலகமும் ஒரு கனவுதான்' என அவர் தெரிவித்தார்.

ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள் 20 மே 1894 அன்று அவதரித்தார். காஞ்சி முனிவர் அல்லது மஹாபெரியவர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 28, 2025 07:00 AMBad Luck Rasis: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.. அஸ்தமனத்தில் சிக்கிய ராசி.. சனி உச்சம்!
Mar 28, 2025 06:35 AMஇரட்டை ராஜ யோகம்.. மீன ராசியில் சூரியன்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் மூன்று ராசிகள்.. நல்ல லாபம் கிட்டும்!
Mar 28, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : சவால்களை தைரியமா எதிர் கொள்ளுங்கள்.. வெற்றி தேடி வரும்.. இன்று உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Mar 27, 2025 05:16 PMGuru: 2025-ல் பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறார் குரு.. இந்த ராசிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க போகுதா?
Mar 27, 2025 05:09 PMகிரகண யோகம்: 2027 வரை சனி விடமாட்டார்.. இந்த ஆண்டு முதல் யோகம் பெறுகின்ற ராசிகள்.. யார் அந்த ராசி?
Mar 27, 2025 12:03 PMLove Horoscope : உங்கள் துணை இன்று அதிக பதட்டமாக உணரலாம்.. 12 ராசிக்கும் இன்று காதல் வாழ்க்கை எப்படி இருக்கு? இதோ
காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஜகத்குரு சங்கராச்சாரியார் ஆவார். மஹாபெரியவாரின் சொற்பொழிவுகள் "தெய்வத்தின் குரல்" (கடவுளின் குரல்) என்ற தமிழ் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர் வேதங்கள், புராணங்கள், பல்வேறு இந்து நூல்கள் மற்றும் பண்டைய இந்திய இலக்கியங்களில் நன்கு பயிற்சி பெற்றார்.
இவருக்கு பெற்றோர் வைத்தப்பெயர் ஸ்வாமிநாதன். இவருக்கு உபநயணம் 1905 ஆம் ஆண்டில் திண்டிவனத்தில் நிகழ்த்தப்பட்டது, அவர் வேதங்களை நன்கு அறிந்தவர். அவரது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பூஜைகள் செய்யத் தொடங்கினார். சந்திரசேகர சரசுவதி சுவாமிகள் 1907 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி காஞ்சி காமகோடி பீடத்தின் அறுபத்தெட்டாவது ஆச்சார்யராக சன்னியாசர் சரஸ்வதி என்ற சன்னியாச பெயருடன் நியமிக்கப்பட்டார்.
பின்னர் வேதங்கள், புராணங்கள், பல்வேறு இந்து நூல்கள் மற்றும் பண்டைய இந்திய இலக்கியங்களுடன் நன்கு பயிற்சி பெற்றார். 1909 ஆம் ஆண்டு இரண்டாண்டுகள் மடத்தினில் தங்கி வேதாந்தங்களைக் கற்றுக் கொண்டார். பின்னர் 1911 முதல் 1914 வரை அகண்ட காவிரியின் வடகரைக் கிராமமான மகேந்திரமங்கலத்தில் கற்றார். இவர் கணிதம், வானியல் மற்றும் புகைப்படத்துறையில் அதிக ஆர்வம் காட்டினார். 1914 ஆம் ஆண்டில் கும்பகோணம் திரும்பினார்.
தெய்வத்தின் குரல்
"‘அத்வைதம்’ என்பதே ஆதி சங்கர பகவத் பாதர்கள் நிலைநாட்டிய சித்தாந்தம் என்று எல்லோருக்கும் தெரியும். ‘அத்வைதம்’ என்றால் என்ன? ‘த்வி’ என்றால் இரண்டு. two என்பது அதிலிருந்து வந்ததுதான். ‘த்வி’யிலுள்ள த் (d) என்பதே ‘டூ’ வில் ‘ட்’ (t) ஆகிவிட்டது. உச்சரிப்பில் ‘டூ’ என்று சொன்னாலும், ஸ்பெல்லிங்கில் t-க்கு அப்புறம் w வருகிறது w- வுக்கு ‘வ’ சப்தமே உண்டு. ‘த்வி’யில் உள்ள ‘வ’ தான் இங்கே w – ஆகிவிட்டது. ‘த்வி’தான் two – இரண்டு. ‘த்வைதம்’ என்றால் இரண்டு உண்டு என்று நினைப்பது. ‘அ-த்வைதம்’ என்றால் ‘இரண்டு இல்லை’ என்று அர்த்தம்.
எந்த இரண்டு இல்லை?
எந்த இரண்டு இல்லை? இப்போது ஸ்வாமி என்று ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு இரண்டாவதாக ஜீவர்கள் என்ற நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறோம் அல்லவா! இப்படி இரண்டு இல்லவே இல்லை. ஸ்வாமி (பிரம்மம்) என்கிற ஒரே சத்திய வஸ்துக்குப் புறம்பாக எதுவுமே இல்லை. அது தவிர, இரண்டாவது வஸ்து எதுவுமே இல்லை. அந்த ஒன்றேதான் மாயா சக்தியினால் இத்தனை ஜீவர்கள் மாதிரியும் தோன்றுகிறது.
இதெல்லாம் வெறும் வேஷம்தான். ஒரு நடிகன் பல வேஷம் போட்டாலும் உள்ளேயிருக்கிற ஆள் ஒருத்தன்தான் என்பதுபோல் இத்தனை ஜீவராசிகள் இருந்தாலும் அவற்றுக்கு உள்ளேயிருக்கிற ஆள் ஸ்வாமி ஒருத்தன்தான். ஜீவாத்மா பரமாத்மா என்று விவகார தசையில் பிரித்துச் சொன்னாலும் வாஸ்தவத்தில் உள்ளது ஒரே ஆத்மாதான். ‘நாம் மாயையைத் தாண்டி இந்த ஞானத்தை அநுபவத்தில் அடைந்துவிட்டால், அப்புறம் எத்தனையோ குறைபாடுகள் உள்ள ஜீவர்களாக இருக்கமாட்டோம்; ஒரு குறையுமில்லாத, நிறைந்த நிறைவான சத்தியமாகவே ஆகிவிடுவோம்’ என்பதுதான் ஆசாரியாள் உபதேசித்த அத்வைத தத்துவம்." என்று இவரது தெய்வத்தின் குரல் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்