Macham Palan : பெண்களுக்கு இங்கு மச்சம் இருந்தால் பணக்கார கணவர் கிடைப்பாராம்.. சிங்கப்பெண்ணாக திகழ்வாராம்!
Mole Astrology : பெண்கள் முகத்தில் ஒவ்வொரு இடத்தில் இருக்கக் கூடிய மச்சத்திற்கும் அதற்குரிய பலன்களை பார்க்கலாம். இந்த இடத்தில் மச்சம் இருந்தால் கொஞ்சம் சிக்கல் தான்.

ஆண், பெண் என இரு பாலர்களின் உடலிலும் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மச்சங்களுக்கு ஜோதிடத்தில் தனிச் சிறப்பு மிக்க அர்த்தங்கள் உள்ளன. மச்சங்கள் நமது தலைவிதியை குறிப்பது மட்டுமின்றி, ஆளுமையையும் பிரதிபலிக்கின்றன.
இது போன்ற போட்டோக்கள்
Mar 21, 2025 06:00 AMமிதுன ராசி பலன்: இந்த வருஷத்துல பணத்தில் வாழும் ராசிகள்.. குரு பெயர்ச்சி பலன்கள்.. யாருப்பா அது?
Mar 21, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : பேரன்பு தேடி வரும்.. அதிர்ஷ்டத்தில் மிதந்தாலும் கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்றைய பலன்கள் இதோ!
Mar 20, 2025 05:48 PMLord Guru: குரு ரோகிணி.. நட்சத்திர கோடீஸ்வர யோகத்தை இந்த ராசிகள் பெறுகின்றார்.. யார் அந்த ராசிகள்?
Mar 20, 2025 12:26 PMமீன ராசியில் புதன்.. இந்த மூன்று ராசிகளுக்கு அடிக்க போகுது லக்.. இனி அதிர்ஷ்ட மழை தான்.. உங்க ராசி இருக்கா பாருங்க!
Mar 20, 2025 12:07 PMராஜயோகம்: இன்று 6 ராசிகளுக்கு அமோகமான நாள்.. கொண்டாட்டம் தான்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்!
Mar 20, 2025 10:11 AMசுக்கிர ராகு பெயர்ச்சி: கட்டு கட்டாக பணத்தை அடுக்கப் போகும் ராசிகள்.. ராகு பயணத்தில் மீனத்தில் கரம் பிடித்த சுக்கிரன்!
நமது உடலில் இருக்கும் மச்சங்கள் கூட நமக்கு அதிர்ஷ்டத்தையும் துன்பத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. இதை அடிப்படையாக கொண்டு தான் கணிக்கப்பட்டிருக்கிறது மச்ச சாஸ்திரம். நம்முடைய உடலில் இருக்கும் ஒரு சிறு புள்ளிகளைத்தான் மச்சம் என்கிறோம். இது கருப்பு, மஞ்சள், நீலம், சிவப்பு, சாம்பல், இளஞ்சிவப்பு போன்ற பல நிறங்களில் இருக்கின்றன. சிலருக்கு கடுகு போல சிறிதாகவும், சிலருக்கு அதைவிட பெரிதாகவும் காணப்படலாம்.
நமது உடல் பாகங்களில் உள்ள மச்சங்கள் சுப பலன்களை தரும் வல்லமை கொண்டதாக உள்ளது. அந்த வகையில் பெண்களுக்கு முகத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள் என்பதை பார்க்கலாம்.
பெண்கள் முகத்தில் நெற்றி பொட்டில் மச்சம் இருந்தால் சமுதாயத்தில் பெரிய வளம் மதிப்பு கொண்ட நபர், பெரிய படைபலம், பணபலம் கொண்ட நபர் கணவராக அமைய வாய்ப்பு அதிகம் உண்டு. அல்லது எதிர்காலத்தில் இவரது கணவர் அந்த நிலைக்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.
வலது நெற்றியில் மச்சம் இருந்தால் இவர் சிங்கப்பெண் என்று அழைக்கலாம். சாதனை அதிகம் படைக்கும் பெண்ணாக இருப்பார். மனவலிமை அதிகம் நிறைந்த தன்னம்பிக்கை உள்ள பெண்ணாக இருப்பார்.
இடது நெற்றியில் மச்சம் இருந்தால் அதுவும் சிவப்பு நிறத்தில் மச்சம் இருந்தால் நல்ல குணம் பண்புகள் உள்ள பெண்ணாக இருப்பார் குடும்பத்தில் சிறந்து விளங்கக்கூடிய பெண்ணாகவும், அனைவருக்கும் நல்ல ஒரு முன் உதாரணமாக திகழும் பெண்ணாகவும் விளங்குவார்.
அதுவே கருப்பு நிறத்தில் மச்சம் இருந்தால் முரட்டுத்தனமான குணம் பிடிவாதமான குணம் மற்றவர்களுக்கு நல்லது செய்வதை விரும்பாத ஒரு பெண்ணாக இருப்பார்.
மூக்குக்கு மேல் மச்சம் இருந்தால் சொல்வதை சொன்னபடியே செய்து காட்டக் கூடிய பெண்ணாக இருப்பார். விடாமுயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவார்.
மூக்கு நுனியில் மச்சம் இருந்தால் செல்வத்தில் உயர்ந்த ஒரு நபர் கணவராக அமைய வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்தில் இவரின் கணவர் இவரின் முயற்சியால் செல்வந்தராக மாற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
உதட்டின் மேல் மச்சம் இருந்தால் இவர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டங்கள் அதிகமாக இருக்கும் இவர்களுக்கு எப்பொழுதும் சிறந்த ஒரு வாய்ப்பு தான் கிடைக்கும் அது முதலில் கிடைத்தாலும் சரி அல்லது இறுதியில் கிடைத்தாலும் சரி அது சிறந்ததாகவே அமையும்.
உதட்டிற்கும் மூக்கிற்கும் இடையில் மச்சம் இருந்தால் எண்ணிய அனைத்தும் உயர்வாகவே இருக்கும் இவரின் மனம் எப்போதும் அமைதியாகவே இருக்கும். கணவர் இவரின் மனதிற்கு பிடித்தது போல தான் அமைவார்.
இடது கன்னத்தில் மச்சம் அனைவரிடமும் இனிமையாகவும் கனிவாகவும் நடந்து கொள்ளக்கூடிய ஒரு நபராக இருப்பார் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு பெண்ணாகவும் இருப்பார்.
வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் இவர்களின் வாழ்க்கையில் சந்தோசம் கஷ்டம் மாறி மாறி வரக்கூடும் இறுதியில் கஷ்டம் எதுவாக இருந்தாலும் வெற்றி நிச்சயம் உண்டு
தலையில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் இவர்கள் எதிலும் திருப்தி அடைய மாட்டார்கள் மற்றவர்களின் வாழ்க்கையை பார்த்து ஏக்கம் அதிகம் படுவார்கள்.
வலது பக்கம் கண்ணுக்கும் காதுக்கும் இடையே மச்சம் இருந்தால் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள நபர்களையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கக்கூடிய நபராக இருப்பார்.
இடது புறம் கண்ணுக்கும் காதுக்கும் இடையே மச்சம் இருந்தால் செல்வத்தில் எப்பொழுதும் கீழ் நிலையில் இருக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு உண்டு.
வலதுபுறத் தாடையில் மச்சம் இருந்தால் இவரின் பழக்கவழக்கம் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு இருக்கும்.
இடதுபுறத்தாடையில் மச்சம் இருந்தால் மனம் குணம் அழகாக நிறைந்திருக்கும். நல்ல விஷயங்கள் பரவி இருக்கும்.
கண்ணில் மச்சம் இருந்தால் எதையும் சுலபமாக அடைய முடியாது. கஷ்டப்பட்டு தான் அடைய வேண்டும்.
காதில் மச்சம் இருந்தால் சமூகத்தில் நல்ல செல்வாக்கு மிக்க நபராக இருப்பார். தன்னிடம் உள்ள செல்வத்தை தாராளமாக செலவு செய்யும் நபராக இருப்பார்.
நன்றி : T Tamil Technology
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்