தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Thirumana Porutham: ’காதல் திருமணத்திற்கு ஜாதக பொறுத்தம் தேவையா?’ ஜோதிட சாஸ்திரம் சொல்லும் உண்மை இதோ!

Thirumana Porutham: ’காதல் திருமணத்திற்கு ஜாதக பொறுத்தம் தேவையா?’ ஜோதிட சாஸ்திரம் சொல்லும் உண்மை இதோ!

Kathiravan V HT Tamil
Apr 06, 2024 03:54 PM IST

“Thirumana Porutham: திருமண பொருத்தம் என்பது ஒரு முழுமையான அறிவியல் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது ஒரு கணிப்பு முறை மட்டுமே. திருமணம் என்பது இரு மனங்களின் ஒற்றுமை என்பதை மறந்துவிடக்கூடாது”

திருமணம் (கோப்புபடம்)
திருமணம் (கோப்புபடம்)

பொதுவாக, திருமண பொருத்தம் பார்க்கும்போது, பின்வரும் 10 பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன:

  1. தின பொருத்தம்
  2. கண பொருத்தம்
  3. மன பொருத்தம்
  4. ஸ்திரீ தீர்க்கம்
  5. யோனி பொருத்தம்
  6. ராசி பொருத்தம்
  7. வர்ண பொருத்தம்
  8. நாடி பொருத்தம்
  9. பலம் பொருத்தம்
  10. களத்திர பொருத்தம்

ஆகிய 10 பொருத்தங்களில் குறைந்தது 8 பொருத்தங்கள் வரை இருந்தால், அந்த திருமணம் சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

திருமண பொருத்தம் பார்க்க பல வழிகள் உள்ளன. ஒரு ஜோதிடரை அணுகி ஜாதகம் பார்த்து பொருத்தம் பார்க்கலாம். அல்லது, இணையத்தில் உள்ள பல ஜோதிட இணையதளங்களில் ஜாதகம் பதிவேற்றி பொருத்தம் பார்க்கலாம்.

திருமண பொருத்தம் என்பது ஒரு முழுமையான அறிவியல் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது ஒரு கணிப்பு முறை மட்டுமே. திருமணம் என்பது இரு மனங்களின் ஒற்றுமை என்பதை மறந்துவிடக்கூடாது.

காதலிப்பவர்கள் திருமண பொறுத்தம் பார்க்கலாமா?

காதல் செய்பவர்கள் திருமணம் செய்து கொள்ள நினைத்தால் அவர்களுக்கு ஜாதக பொருத்தங்களை விட மனப்பொருத்தம்தான் முக்கியம் என ஜோதிடர் ஷெல்வி தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கூறி உள்ளார். 

காதல் திருமணத்திற்கு ஜாதகம் பார்க்க வேண்டுமா என்ற கேள்வி பலரிடத்தில் உள்ளது. ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்துவதன் மூலம் காதல் உண்டாகிறது. காதல் தூய்மையானதாக இருந்தால் ஜாதக பொறுத்தமோ, பெயர் பொறுத்தமோ பார்க்க தேவை இல்லை என ஜோதிட சாஸ்திரம் கூறுவதாக ஜோதிடர் அஸ்ட்ரோ பாலா வேலூர் கூறுகிறார்.

குரு சொல்லும் பெண்களை திருமணம் செய்து கொள்ளும் போதோ அல்லது தெய்வ சகுணம் மூலம் நிச்சயமாகும் பெண்ணையோ, அல்லது கர்பம் தரித்த பெண்ணையோ திருமணம் செய்ய ஜாதகம் பார்க்க அவசியம் இல்லை. 

ஆனால் இவர்களின் திருமண தேதியை முடிவு செய்ய கண்டிப்பாக ஜாதகம் பார்க்க வேண்டும்.  அதே போல் மணமகள் மற்றும் மணமகன் வாழ்கை குறித்து தனிப்பட்ட முறையில் ஜாதகம் பார்க்கலாமே தவிர திருமண பொறுத்தம் பார்க்க கூடாது. ஜாதகத்தையும் மீறி தெய்வ அனுகிரகம்  இருந்தால் திருமண வாழ்கை சுகமானதாக அமையும் என ஜோதிடர் அஸ்ட்ரோ பாலா வேலூர் கூறுகிறார். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel