Thirumana Porutham: ’ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா?’ ஜோதிடர் சொல்லும் மாற்றுக் கருத்து!
”Thirumana Porutham: இதில் பிரச்னைகள் நட்சத்திரங்களால் வருவது இல்லை, தசாபுத்தியின் நிலைகளைத்தான் உணர்ந்து தர வேண்டும்”
ஒரே ராசி, ஒரே நட்சத்திரத்தில் உள்ள ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாமா என்பது பலரது கேள்வியாக உள்ளது. ஆனால் அதற்கு ஜோதிடர்கள் பெரும்பாலானோரின் பதில் வேண்டாம் என்பதாக உள்ளது.
ஆனால் வாசன் பஞ்சாங்கம் இதில் சில மாற்றுக் கருத்துக்களை முன் வைத்து உள்ளதாக ஜோதிடர் பாலசுப்பிரமணியன் கூறுகிறார்.
ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்கள் ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்து கொள்ளலாம்.
அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிசம், புணர்பூசம், உத்தரம், சித்திரை, அனுசம், உத்ராடம் ஆகிய 8 நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் ஓரளவுக்கு செய்து கொள்ளலாம் என்கிறனர்.
இதில் பிரச்னைகள் நட்சத்திரங்களால் வருவது இல்லை, தசாபுத்தியின் நிலைகளைத்தான் உணர்ந்து தர வேண்டும்.
ஒரு மாப்பிளைக்கும், பெண்ணுக்கும் ஜாதகம் பார்க்கும் போது ஒரே தசாபுத்தி வரக்கூடாது. உதாரணமாக ஒருவருக்கு குருமகா தசையில் சூர்ய புத்தி என்றால், மற்றவருக்கும் அதே குருமகா தசையில் சூர்ய புத்தி வரக்கூடாது.
ஏகநடத்திரத்தில் திருமணம் செய்யலாம், ஆனால் மாப்பிள்ளை நட்சத்திரம் முன்னும், மணப்பெண் நட்சத்திரம் பின்னாலும் சென்றுக் கொண்டு இருக்கின்றனர்.
அதாவது ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் மாப்பிள்ளை இருந்தால், பெண்ணின் நட்சத்திரத்தின் பாதம் 2, 3, 4ஆவது பாதங்களில் பெண்ணின் நட்சத்திரம் இருக்கலாம். ஆனால் பெண்ணின் நட்சத்திரம் இதற்கு நேர்மாறாக இருக்க கூடாது.
நட்சத்திரங்கள் பாதத்தில் முன்னால் உள்ள பாதம் ஆணுக்கும், பின்னால் உள்ள பாதங்கள் பெண்ணுக்கும் இருக்க வேண்டியது அவசியம்.
இதே போல் ஒரே ராசியாக இருந்து நட்சத்திரங்கள் வேறுவேறாக இருந்தால் திருமணம் செய்யலாமா என்றால், உதாரணமாக ரிஷபராசியில் ஒருவருக்கு ரோகிணி நட்சத்திரமும், மற்றொருவருக்கு மிருகசீரிச நட்சத்திரமும் இருந்தால், மிருகசீரிசம் ஆணின் நட்சத்திரமாக இருந்து, ரோகிணி நட்சத்திரம் பெண் நட்சத்திரமாக இருந்தால் திருமணம் செய்யலாம்.
ஆனால் பெண் நட்சத்திரம் ஆணுக்கும், ஆண் நட்சத்திரம் பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யக்கூடாது.
பொதுவாக, திருமண பொருத்தம் பார்க்கும்போது, பின்வரும் 10 பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன:
- தின பொருத்தம்
- கண பொருத்தம்
- மன பொருத்தம்
- ஸ்திரீ தீர்க்கம்
- யோனி பொருத்தம்
- ராசி பொருத்தம்
- வர்ண பொருத்தம்
- நாடி பொருத்தம்
- பலம் பொருத்தம்
- களத்திர பொருத்தம்
ஆகிய 10 பொருத்தங்களில் குறைந்தது 8 பொருத்தங்கள் வரை இருந்தால், அந்த திருமணம் சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
திருமண பொருத்தம் என்பது ஒரு முழுமையான அறிவியல் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது ஒரு கணிப்பு முறை மட்டுமே. திருமணம் என்பது இரு மனங்களின் ஒற்றுமை என்பதை மறந்துவிடக்கூடாது.
இரு மனம் இணையும் திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்ற பெயர் உண்டு. திருமண பொருத்தம் என்பது திருமணம் செய்து கொள்ளும் ஆண் மற்றும் பெண்ணின் பிறந்த ஜாதகங்களை ஒப்பிட்டு, அவர்கள் வாழ்க்கையில் இணைந்து பயணித்தால் சந்தோஷமாக இருக்குமா என்பதை கணிக்கும் ஜோதிட முறையாக உள்ளது. இந்த முறை பல நூற்றாண்டுகளாக தமிழ் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.