தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Horoscope Luck: 4ம் இடத்தில் சூரியன்.. அரண்மனை போல வீடு கட்டி வாழும் யோகம் யாருக்கு? - ஜோதிடர் பேட்டி!

Horoscope Luck: 4ம் இடத்தில் சூரியன்.. அரண்மனை போல வீடு கட்டி வாழும் யோகம் யாருக்கு? - ஜோதிடர் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
May 18, 2024 03:15 PM IST

Horoscope Luck: நான்காம் இடத்தில் ராகு பகவான் இருந்தாலும், அதே எண்ணம் மேலோங்கி காணப்படும். சுக்கிரன் நன்றாக இருந்தால், அவர்கள் வீட்டை அழகாக பார்த்து பார்த்து கட்டுவார்கள் - ஜோதிடர் பேட்டி!

Horoscope Luck: 4ம் இடத்தில் சூரியன்.. அரண்மனை போல வீடு கட்டி வாழும் யோகம் யாருக்கு? - ஜோதிடர் பேட்டி!
Horoscope Luck: 4ம் இடத்தில் சூரியன்.. அரண்மனை போல வீடு கட்டி வாழும் யோகம் யாருக்கு? - ஜோதிடர் பேட்டி!

ஆசையை விதைக்கும் சூரியன் 

 

இது குறித்து அவர் பேசும் போது, “பெரிய வீடு கட்டுவதற்கான ஆசையை விதைப்பவர் சூரியபகவான். கார்த்திகை, உத்திரம், உத்திராடம், மேஷத்தில் சூரியன் உச்சம், சிம்ம லக்னம், சிம்ம ராசியில் பிறந்தவர்கள், லக்னத்திலேயே சூரியன், நான்காம் இடத்தில் சூரியன் உள்ளிட்ட அமைப்பு இருந்தால், அவர்களுக்கு மிகவும் சிம்பிளான வீடு கட்டுவதில் விருப்பம் இருக்காது. 

மாறாக, அவர்களது எண்ணம் பிரமாண்டமான வீட்டைக்கட்டுவது நோக்கியே அமைந்திருக்கும். சந்திரன்,சூரியன், சுக்கிரன் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்கள் எல்லாம் இந்த வீடு கட்டுவதில் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் 4ம் வீட்டோடு தொடர்பு கொண்டால், அந்த ஜாதகக்காரர் நிச்சயமாக பிரமாண்டமான வீட்டைக் கட்டியே தீருவார். 

நான்காம் இடத்தில் ராகு பகவான் இருந்தாலும், அதே எண்ணம் மேலோங்கி காணப்படும். சுக்கிரன் நன்றாக இருந்தால், அவர்கள் வீட்டை அழகாக பார்த்து பார்த்து கட்டுவார்கள். சனி மற்றும் சுக்கிரன் நன்றாக இருந்தால், அதில் வசிப்பவர்கள் வீடுகளில் குளு குளுவென ஏசி போட்டு வாழ்வார்கள். குருவின் பலம் நன்றாக இருந்தால் அவர்கள் வீட்டில் பூஜை அறையானது நன்றாக இருக்கும். 

அள்ளித்தரும் 4 ம் இடம்

சுக்கிரன் மற்றும் ராகு நன்றாக இருந்தால், சமையல் அறை நன்றாக இருக்கும். வீட்டில் மரவேலைகள் அழகாக இருந்தால், குரு மற்றும் சனி ஆதிக்கம் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். வீடுகளில் விதவிதமான பூட்டுகளைப் போட்டு அலங்கரிப்பவர்களுக்கு, சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் நன்றாக இருக்கும். செவ்வாய் மற்றும் சந்திரன் நன்றாக இருந்தால், வீட்டினுள் செடிகள் வைத்து பராமரிப்பார்கள். 

அரண்மனை போன்று தூண்கள் அமைத்து பிரமாண்டமாக வீட்டை கட்ட வேண்டும் என்றால், அங்கு சூரியன் மற்றும் செவ்வாய் நன்றாக இருக்க வேண்டும். பொதுவாக உங்களுக்கு அரண்மனை போன்ற வீடு அமையுமா என்பதை பார்க்க வேண்டும் என்றால் முதலில் உங்களது ஜாதகத்தில் 4ம்  இடத்தை பார்க்க வேண்டும்.

அங்கு செவ்வாய், குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், ராகுவின் ஆதிக்கம் உள்ளிட்டவை இருந்தால், உங்களுடைய அரண்மனை போன்ற வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் நடக்கும். அந்த இடத்தில் பாதகம் இல்லாமலும், திரிசூனியம் இல்லாமல் இருக்க வேண்டும். சனி பார்வை அதிகம் இருந்தால் வீட்டை சுத்தமாக வைப்பதற்கு விடாது” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்