Love Break up Rasis: உங்களுக்கொல்லாம் லவ் செட் ஆகாது! அதிக பிரேக் அப் எதிர்கொள்ளும் ராசிகள் இவர்கள் தான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Love Break Up Rasis: உங்களுக்கொல்லாம் லவ் செட் ஆகாது! அதிக பிரேக் அப் எதிர்கொள்ளும் ராசிகள் இவர்கள் தான்

Love Break up Rasis: உங்களுக்கொல்லாம் லவ் செட் ஆகாது! அதிக பிரேக் அப் எதிர்கொள்ளும் ராசிகள் இவர்கள் தான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 27, 2024 10:00 PM IST

ஜோதிடத்தில் அதிக பிரேக் அப் எதிர்கொள்ளும் ராசிகள் இவர்கள் தான் என கூறப்படுகிறது. அந்த வகையில் லவ் செட் ஆகாமல் பிரேக் அப் சந்திக்கும் ராசிகளை பார்க்கலாம்.

அதிக பிரேக் அப் எதிர்கொள்ளும் ராசிகள் இவர்கள் தான்
அதிக பிரேக் அப் எதிர்கொள்ளும் ராசிகள் இவர்கள் தான்

சிலர் அதிகம் உணர்ச்சிவசப்பட கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் எல்லாவற்றிலும் தங்களை இணைத்துகொள்பவர்களாக இருப்பார்கள். குறிப்பாக காதல் விஷயத்தில் அதிக அதிர்ச்சிகளை அவர்கள் அனுபவிக்கலாம்.

ஜோதிடத்தில் சில ராசிக்காரர்கள் மற்றவர்களை விட தங்கள் வாழ்க்கையில் அதிக காதல் முறிவுகளை எதிர்கொள்பவராக இருப்பார்கள் என கூறப்படுகிறது. இதனால் மிகுந்த வருத்தம் மிக்க விஷயமாக இருந்தாலும், உடைந்த இதயத்தை ஒட்ட வைக்கும் முயற்சியிலும் தோல்வியை சந்திக்க நேரிடலாம் எனவும் சொல்லப்படுகிறது. எந்த ராசிக்காரர்கள் பிரேக்அப்பால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பார்க்கலாம்

மேஷம்

இந்த ராசியினர் மிக எளிதில் காதலில் விழுவார்கள். காதல் உறவு பற்றி எல்லாவற்றையும் தனிப்பட்ட முறையில் தெரிந்துகொள்வதற்குள், ஏமாற்றமும் அடைகிறார்கள். அவர்கள் தங்களை ஒரு சிறந்த ஜோடி என்று நினைப்பதுண்டு. ஆனால் அது உண்மையல்ல என்று தெரிந்ததும், அவர்களது காதல் முறிந்து விடுகிறது. எனவே மேஷ ராசியனர் காதல் விஷயத்தில் பல்வேறு அதிர்ச்சிகளை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம். அவர்களின் உணர்வு மிகவும் ஆழமாக இருப்பதால், பிரேக் அப்பில் இருந்து ​அவர்களால் எளிதில் வெளிவர முடியாது

கடகம்

இந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசபடுபவர்காக இருப்பார்கள். காதல் உறவில் ஆழமாக நேசிப்பவர்களாக இருப்பார்கள்.மிகவும் அன்பாகவும் அக்கறையுடனும் இருப்பார்கள். அவர்கள் தங்கள் பார்னரிடமிருந்து அதையே எதிர்பார்க்கிறார்கள். இது நடக்காதபோது அவர்கள் உணர்ச்சிவசப்படுவதுடன், கடுமையான வலியை பெறுகிறார்கள். உறவுகளில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். தங்கள் உணர்வுகளுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படாத போது மிகுந்த வேதனை அடைகிறார்கள்.

துலாம்

இந்த ராசியினர் நல்லிணக்கத்தையும், சமநிலையையும் நாடுபவர்களாக இருக்கிறார்கள்.தங்களது உறவிலும், துணையிடமும் அதையே விரும்புகிறார்கள். அது கிடைக்காத போது வலியை உணர்கிறார்கள். மௌனத்தில் திளைக்கும் இவர்கள், பிரச்னைகள் தீர்க்கப்படாமல் மேலும் வேதனையை அனுபவிக்கிறார்கள். எனவே துலாம் ராசியினர் அன்பை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்

விருச்சிகம்

இந்த ராசிக்காரர்கள் உணர்ச்சிவசம் மிக்கவர்களாக இருக்கிறார்கள். மிகவும் ஆழமான அன்பு கொண்டவராகவும் உல்ளார்கள்காதல் என்று வரும்போது அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகுவார்கள். தங்கள் துணைக்கு மிகவும் விசுவாசமாக இருப்பார்கள். அதையே அவர்கள் எதிர்பார்ப்பார்கள். தங்கள் நம்பிக்கையை சமரசம் செய்யும்போது அவர்கள் மிகுந்த வேதனையை உணர்கிறார்கள். அவர்கள் தங்கள் உறவை பிரிந்திருக்கும் போது அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள்

மீனம்

மீனத்தை நிழல் கிரகமான ராகு ஆட்சி செய்கிறது. இது கனவு மற்றும் காதல் குணங்களுக்கு பெயர் பெற்றது. இந்த ராசி யாரையும் மிக ஆழமாக நேசிக்கும் குணம் கொண்டது. அதனால் அவர்கள் கனவு கண்டு அதற்கேற்ப தங்கள் எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்கிறார்கள்.

உண்மையில், அந்த கனவு நனவாகாதபோது, ​​​​அவர்களின் மனம் மிகவும் வேதனை அடைகிறது. மீனம் ராசிக்காரர்கள் தங்கள் காதலர்கள் மீது மிகவும் அன்பு கொண்டவர்களாக இருப்பார்கள். உறவில் சமநிலையின்மை ஏற்படும் போது, கடுமையான வலியை அனுபவிக்கிறார்கள். எனவே இந்த ராசியினர் அன்பை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் உணர்ச்சி ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும்

குறிப்பு: இது நம்பிக்கை மற்றும் வேதத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட எழுத்து. "ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்" அதில் உள்ள அனைத்து கருத்துகளுக்கும் பொறுப்பாகாது. உங்கள் சொந்த விருப்பத்தைப் பயன்படுத்தி முடிவுகளை எடுத்து கொள்ளலாம்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner