விரைவில் சிம்ம ராசியில் நுழையும் செவ்வாய்.. வெற்றிகள் குவியும்.. அதிர்ஷ்டம் பெருகும்.. எந்த 3 ராசிக்கு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  விரைவில் சிம்ம ராசியில் நுழையும் செவ்வாய்.. வெற்றிகள் குவியும்.. அதிர்ஷ்டம் பெருகும்.. எந்த 3 ராசிக்கு தெரியுமா?

விரைவில் சிம்ம ராசியில் நுழையும் செவ்வாய்.. வெற்றிகள் குவியும்.. அதிர்ஷ்டம் பெருகும்.. எந்த 3 ராசிக்கு தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Published May 11, 2025 11:27 AM IST

செவ்வாய் பகவான் வரும் ஜூன் மாதம் சிம்ம ராசிக்கு செல்கிறார். இது 12 ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கும் பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

விரைவில் சிம்ம ராசியில் நுழையும் செவ்வாய்.. வெற்றிகள் குவியும்.. அதிர்ஷ்டம் பெருகும்.. எந்த 3 ராசிக்கு தெரியுமா?
விரைவில் சிம்ம ராசியில் நுழையும் செவ்வாய்.. வெற்றிகள் குவியும்.. அதிர்ஷ்டம் பெருகும்.. எந்த 3 ராசிக்கு தெரியுமா?

இது போன்ற போட்டோக்கள்

செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷம் அல்லது விருச்சிகத்தில் பயணிக்கும்போது, அது மக்களுக்கு நல்ல செய்தியைப் பொழிகிறது. அதேநேரம், செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி வெவ்வேறு ராசிகளின் வாழ்க்கையை மாற்றுகிறது என்று ஜோதிடம் கூறுகிறது. அந்த வகையில், தற்போது கடக ராசியில் பயணித்து வரும் செவ்வாய் பகவான் வரும் இந்தாண்டு ஜூன் 7 ஆம் தேதி அன்று அதிகாலை 02:28 மணிக்கு சிம்ம ராசிக்கு செல்கிறார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் ஒரு சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று பார்ப்போம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரத்தில் உங்களுக்கு ஏற்ற காலமாக இது அமையும் என கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புகழின் உச்சிக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.

துலாம்

செவ்வாய் இடமாற்றம் துாலா் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வருமானத்தில் உங்களுக்கு நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்க என கூறப்படுகிறது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது.,பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தருமனுக்கு கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பாராட்டுகளை பெற்று தரும் என கூறப்படுகிறது.

விருச்சிகம்

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு அபரிமிதமான நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய திட்டங்கள் வெற்றிகரமாக அமையும் என கூறப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.,அதிக பணம் சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வருமானத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.