அர்த்தகேந்திர ராஜ யோகம்.. குரு - சூரியன் சேர்க்கை.. 3 ராசிகளுக்கு ஜாக்பாட் பண மழை.. உங்க ராசி இருக்கான்னு பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அர்த்தகேந்திர ராஜ யோகம்.. குரு - சூரியன் சேர்க்கை.. 3 ராசிகளுக்கு ஜாக்பாட் பண மழை.. உங்க ராசி இருக்கான்னு பாருங்க!

அர்த்தகேந்திர ராஜ யோகம்.. குரு - சூரியன் சேர்க்கை.. 3 ராசிகளுக்கு ஜாக்பாட் பண மழை.. உங்க ராசி இருக்கான்னு பாருங்க!

Karthikeyan S HT Tamil
Published Apr 21, 2025 08:51 AM IST

அர்த்தகேந்திர ராஜ யோகம் 2025: நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவானும், தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவானும் தங்களது ராசி அடையாளத்தை மாற்றப்போகின்றனர். இதனால் உருவாகும் அர்த்தகேந்திர ஜோகத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் மூன்று ராசிகள் பற்றி பார்ப்போம்.

அர்த்தகேந்திர ராஜ யோகம்.. குரு - சூரியன் சேர்க்கை.. 3 ராசிகளுக்கு ஜாக்பாட் பண மழை.. உங்க ராசி இருக்கான்னு பாருங்க!
அர்த்தகேந்திர ராஜ யோகம்.. குரு - சூரியன் சேர்க்கை.. 3 ராசிகளுக்கு ஜாக்பாட் பண மழை.. உங்க ராசி இருக்கான்னு பாருங்க!

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்கள் இடமாறும் பொழுது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. அப்படி உருவாகும் யோகங்கள் பல்வேறு விதமான தாக்கங்களை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தும். அந்தவகையில், நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவானும், தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவானும் தங்களது ராசி அடையாளத்தை மாற்றப்போகின்றனர்.

குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். இதில் சூரியன் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார். குரு பகவான் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இவ்விரு கிரகங்களும் வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி இணைகின்றன. இதன் காரணமாக அர்த்தகேந்திர ராஜ யோகம் உருவாக உள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கும். இருந்தாலும் சில குறிப்பிட்ட ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். இப்போது சூரியன் குருவால் உருவாகும் அர்த்தகேந்திர ராஜ யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

அர்த்தகேந்திர யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். வெளிநாடு செல்ல முயற்ச்சிப்பவர்களுக்கு வாய்ப்புகள் கைகூடிவரும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கும் சூழல் உள்ளது. வாழ்க்கையில் பல நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை அர்த்தகேந்திர ராஜயோகமானது வாழ்க்கையில் பலவிதமான நல்ல செய்திகளை கொண்டுவரும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் செயல்திறனால் நல்ல பாராட்டுக்களைப் பெறுவார்கள். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தகேந்திர ராஜ யோகமானது நல்ல பலன்களை தரும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி கிடைக்கும் சூழல் உள்ளது. பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணும் வாய்ப்புள்ளது. சிலருக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.