GURU MONEY LUCK: குரு நட்சத்திர இடப்பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்.. இவர்களை கையில் பிடிக்க முடியாது
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Money Luck: குரு நட்சத்திர இடப்பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்.. இவர்களை கையில் பிடிக்க முடியாது

GURU MONEY LUCK: குரு நட்சத்திர இடப்பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்.. இவர்களை கையில் பிடிக்க முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Published Aug 24, 2024 05:51 PM IST

Guru Bhagavan: குருபகவானின் மிருகசீரிஷம் நட்சத்திரம் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி வரை நீடிக்கும். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

GURU MONEY LUCK: குரு நட்சத்திர இடப்பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்.. இவர்களை கையில் பிடிக்க முடியாது
GURU MONEY LUCK: குரு நட்சத்திர இடப்பெயர்ச்சி.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்.. இவர்களை கையில் பிடிக்க முடியாது

இது போன்ற போட்டோக்கள்

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார். அவர் 2025 ஆம் ஆண்டு குருபகவான் தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அன்று மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைந்தார்.

குருபகவானின் மிருகசீரிஷம் நட்சத்திரம் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி வரை நீடிக்கும். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வெற்றிகளை வாரி குவிக்கும் அதிர்ஷ்டத்தின் முழு பலனும் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கடக ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய செயல் திறன் சிறப்பாக இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். போட்டியாளர்களுக்கு உங்களுக்கு கடுமையான போட்டி இருக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கக்கூடிய மற்றும் சேமிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிக ராசி

குருபகவானின் நட்சத்திர இடம் மற்றும் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. புதிய நண்பர்கள் உங்களுக்கு அதிகமாக கிடைப்பார்கள்.

பழைய நண்பர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். உயர் அலுவலர்களின் பாராட்டு மற்றும் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews