Guru Transit: குரு சொப்பனத்தில் கூட காணாத யோகத்தை கொட்டுகிறார்.. பணக்கார ராசிகள்.. திருமண யோகம்..!
Guru Transit: குரு பகவானின் மிதுன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பணக்கார யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru Transit: நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் குரு பகவான் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்நிலையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் மிதுன ராசிக்கு செல்கிறார். இது புதன் பகவானின் சொந்தமான ராசி ஆகும். குரு பகவானின் மிதுன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பணக்கார யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
கும்ப ராசி
சனிபகவானின் சொந்தமான ராசியான உங்களுக்கு குரு பகவான் பல்வேறு விதமான பணி யோகத்தை கொடுக்க போகின்றார். அதிர்ஷ்டத்திற்கு எந்த குறையும் இருக்காது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். சுயதொழில் செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
தனுசு ராசி
குருபகவான் உங்களுக்கு முழு ஆசிர்வாதத்தை கொடுக்கப் போகின்றார். எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் லாபகரமாக அமையும். முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். முக்கிய வேலைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்க கூடும். பயணங்கள் செல்லக்கூடிய சூழ்நிலைகள் உங்களுக்கு அமையும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
திருமண யோகம் கிடைக்க கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
மேஷ ராசி
குருபகவான் உங்களுக்கு பண வரவை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றார். அவருடைய இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பரம்பரை சொத்துக்கள் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து ஆதாயம் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். வெளிநாட்டிற்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்றவாறு முடிவடையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
