தமிழ் செய்திகள்  /  Astrology  /  These Are The Zodiac Signs Who Will Live The King Life Of Guru Bhagavan

Money Luck: குரு பகவான் சம்பவம் உறுதி.. ராஜ வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 21, 2024 02:57 PM IST

குரு பகவான் ராஜ வாழ்க்கையை வாழப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்.

 குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குரு பகவானின் இடமாற்றத்தை பொறுத்து சில அசுப பலன்கள் கிடைக்கும். மங்களநாயகனாக விளங்கக்கூடிய குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளின் காரணியாக விளங்கி வருகிறார். குருபகவான் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அன்று மேஷ ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்தார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

குருபகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும், ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகின்றனர். எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

குருபகவான் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுப்பார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். செல்வத்தின் முழு அதிர்ஷ்டமும் உங்களுக்கு கிடைக்கும். புதிய வழிகளில் இருந்து வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். அனைத்து விதமான வசதிகளும் உங்களுக்கு கிடைக்கும். குரு பகவான் எப்போதும் உங்களுக்கு சாதகமாக இருப்பார்.

கன்னி ராசி

 

குருபகவான் உங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் கொடுப்பார். மூதாதையர் சொத்துக்களில் இருந்து உங்களுக்கு ஆதாயம் கிடைக்கப் போகின்றது. வாழ்க்கையில் செல்வ செழிப்பு உண்டாகும். ஆன்மீக ரீதியாக உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதில் முழுமையான கவனம் உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். உங்களது கனவு நிறைவேறும் பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

சிம்ம ராசி

 

வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை குரு பகவான் கொடுப்பார். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு உறுதியாகும். பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். வெற்றிகரமான பாதையில் உங்களுடைய பயணம் இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் வாய்ப்புகள் அதிகமாகும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. வருமானத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். நினைத்த விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

மிதுன ராசி

 

குருபகவான் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுப்பார் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் உள்ளது. மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். திடீரென எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். அனைத்து விதமான செல்வங்களும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆசிரியர்கள் நிறைவேற கூடிய சூழ்நிலை உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.