Tamil News  /  Astrology  /  These Are The Zodiac Signs Who Get Raja Yoga Due To Transit Of Venus

Sukra: பண மழையில் நனைக்க போகும் சுக்கிரன்.. இந்த ராசிகளுக்கு யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 01, 2024 01:24 PM IST

Transit of Venus: சுக்கிரனின் இடப்பெயர்ச்சியால் ராஜ யோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்.

சுக்கிர இடப்பெயர்ச்சி
சுக்கிர இடப்பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார். இம்மாத தொடக்கத்தில் அதாவது பிப்ரவரி மாதத்தில் மகர ராசிக்கு இடம் மாறுகிறார். ஒரு மார்ச் மாதத்தில் மீன ராசிக்கு இடம் பெயர்கிறார்.

சுக்கிர பகவான் மார்ச் 31ஆம் தேதி அன்று மீன ராசிக்கு இடம் மாறுகின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெற போகின்றது. இந்த 12 ராசிகளில் அதிகப்படியான அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மிதுன ராசி

 

சுக்கிர பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி ராசி

 

சுக்கிர பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் அமர்ந்திருப்பதால் உங்களுக்கு நல்ல பலன்களை கிடைக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. திடீரென அதிர்ஷ்டத்தின் யோகம் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களால் ஆதாயம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

கடக ராசி

 

சுக்ரன் பகவானால் உங்களுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் இவர் அமர்ந்திருக்கிறார். கடன் சிக்கல்கள் குறையும். அரசியல் துறையில் முன்னேற்றம் உண்டாகும். சொந்த தொழில் தொடங்குபவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் கைகூடும். திடீரென பணவரவில் எந்த குறையும் இல்லாமல் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பெரிய தலைவரோடு பழக்கம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.