ராகு பெயர்ச்சி பலன்கள்: 18 ஆண்டுகளுக்குப் பின் கொட்டும் பணமழை.. கும்பம் செல்கின்றார் ராகு.. ஜாலியான ராசிகள் யார்?
Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

Lord Rahu: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். இவருக்கு என்ன சொந்த ராசி கிடையாது.
இது போன்ற போட்டோக்கள்
Apr 28, 2025 02:30 PMஇந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் அதிர்ஷ்ட யோகம்.. நிதி ஆதாயங்கள், மன அமைதி கிடைக்கும்!
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
ராகு பகவானின் செயல்பாடுகள் அனைத்தும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ராகு பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் ராகு பகவான் மீன ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்கு செல்கின்றார். இது சனி பகவானின் சொந்தமான ராசியாகும்.
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
மேலும் படிங்க| செவ்வாய் இடமாற்றத்தால் கஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள்
துலாம் ராசி
உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப்போகின்றார். அதனால் உங்களுக்கு நினைவுத் திறன் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.
காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பாராத அளவிற்கு உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதுவரை உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த கஷ்டங்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| சுக்கிர பெயர்ச்சி மூலம் அதிர்ஷ்ட பலன்களை பெறுகின்ற ராசிகள்
சிம்ம ராசி
உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
வாழ்க்கை துணையோடு உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும் என கூறப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. நண்பர்களால் உதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க| சனி ஆசிர்வாதத்தை முழுமையாக பெறுகின்ற ராசிகள்
கன்னி ராசி
உங்கள் ராசியில் ஆறாவது வீட்டிற்கு ராகு பகவான் வரப்போகின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும் இடம் கூறப்படுகிறது.
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என கூறப்படுகிறது. நல்ல நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
