Rahu Peyarchi: ராகு கும்ப ராசி.. 2025-ல் இரட்டை ஜாக்பாட்.. கல்யாண யோக ராசிகள்.. இனி தடை இல்லை!
Rahu Peyarchi: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Rahu Peyarchi: நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசுக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.
அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் ராகு பகவான் தனது பயணத்தை தொடங்கினார். 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்தார். இந்த 2025 ஆம் ஆண்டு ராகு பகவான் தனது இடத்தை மாற்றிகின்றார்.
அந்த வகையில் ராகு பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு கும்ப ராசிக்கு செல்கிறார் இது சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
மேஷ ராசி
ராகு பகவானின் புதிய பயணம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தர போகின்றது வருமானம் அதிகரிக்க கூடும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் பல மடங்கு லாபம் கிடைக்கும்.
கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும் நிம்மதியான வாழ்க்கையை ராகு பகவான் கொடுப்பார். புதிய முதலீடுகளால் உங்களுக்கு சொத்து வாங்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மகர ராசி
ராகு பகவான் உங்களுக்கு நல்ல பலன்கள் இந்த ஆண்டு கிடைக்கப் போகின்றது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகள் குறைந்து சேமிப்பது இருக்கும். துன்பங்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் பேச்சுத் திறமை உங்களுக்கு அதிகரிக்கும். மற்றவர்களுக்கு கவரக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
குடும்ப உறுப்பினர்களோடு வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். திருமண யோகம் கிடைக்கப்போகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும்.
ரிஷப ராசி
ராகு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு இந்த ஆண்டு நல்ல யோகத்தை பெற்று தர போகின்றது. கரும நிலையில் இருந்து ராகு பகவான் உங்களுக்கு நல்ல பண வரவை கொடுக்கப் போகின்றார். தொழிலில் நல்ல யோகம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு அமையும்.
புதிய தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு அமையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். செலவுகளுக்கு ஏற்ப உங்களுக்கு வருமானம் இரட்டிப்பாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
