Budhan Peyarchi: மகர ராசிக்காரர்களே.. நாளை நுழைகிறார் புதன்.. மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளும் 3 ராசிகள்
Budhan Peyarchi: புதன் பகவானின் மகர ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பணக்கார யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Mercury: நவக்கிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் ஒரு மாதத்திற்கும் குறைவாக தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவகிரகங்களில் வெகு சீக்கிரமாக தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகமாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். இருப்பினும் இவருடைய இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Feb 17, 2025 05:00 AMToday Rasipalan : 'மகிழ்ச்சியா இருங்க.. உழைப்பு வீண் போகாது.. நம்பிக்கை முக்கியம்' இன்று பிப்ரவரி 17 ராசிபலன் இதோ!
Feb 16, 2025 10:33 PMTrigrahi Yogam : சிவராத்திரிக்குப் பின் எந்த 3 ராசிக்காரர்களுக்கு கடினமான காலமாக இருக்கலாம் பாருங்க.. வேலையில் கவனம்!
Feb 16, 2025 01:26 PMMercury in Pisces : மீன ராசியில் புதன்.. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் என்ன பலன்.. இதோ பாருங்க!
Feb 16, 2025 07:00 AMRahu Horoscope: ராகு 2025-ல் கும்பத்தில் நுழைகிறார்.. 3 ராசிகள் வாழ்க்கை என்ன ஆகப்போகுது தெரியுமா.. வாங்க பார்க்கலாம்
Feb 16, 2025 05:00 AMToday Rasipalan : ‘வெற்றி தேடி வரும்.. கோபம் வேண்டாம்.. வேலையில் கவனம் மக்களே’ இன்று பிப்.16 ராசிபலன் இதோ!
Feb 15, 2025 11:24 AMLove Horoscope : இன்று எந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்? யார் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?
புதன் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவர் புதன் பகவான். இவர் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
புதன் பகவான் வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி அன்று மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். புதன் பகவானின் மகர ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் பணக்கார யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
மேஷ ராசி
புதன் பகவானின் ராசி மாற்றம் உங்களுக்கு நிதி ரீதியாக சாதகமாக அமைந்துள்ளது. புதிய வேலைவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழில்துறையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கக்கூடும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.
ரிஷப ராசி
புதன் பகவானின் மகர ராசி பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு வலிமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும்.
வணிகத்தில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய சூழ்நிலைகள் உங்களுக்கு அமையும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். இருப்பினும் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும்.
கன்னி ராசி
புதன் பகவானின் மகர ராசி பயணம் உங்களுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வருமானத்திற்கான ஆதாரங்கள் உங்களுக்கு அதிகரிக்கும். செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். புதிய திட்டங்கள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
