Sani: சனி அஸ்தமனம்.. கோடி கோடியாக பணம் கொட்டும் ராசிகள் நீங்கள் தானா?.. முடிஞ்சா நெருங்கி பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani: சனி அஸ்தமனம்.. கோடி கோடியாக பணம் கொட்டும் ராசிகள் நீங்கள் தானா?.. முடிஞ்சா நெருங்கி பாருங்க!

Sani: சனி அஸ்தமனம்.. கோடி கோடியாக பணம் கொட்டும் ராசிகள் நீங்கள் தானா?.. முடிஞ்சா நெருங்கி பாருங்க!

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 25, 2025 09:52 AM IST

Sani: சனி பகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் செல்வ யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Sani: சனி அஸ்தமனம்.. கோடி கோடியாக பணம் கொட்டும் ராசிகள் நீங்கள் தானா?.. முடிஞ்சா நெருங்கி பாருங்க!
Sani: சனி அஸ்தமனம்.. கோடி கோடியாக பணம் கொட்டும் ராசிகள் நீங்கள் தானா?.. முடிஞ்சா நெருங்கி பாருங்க!

நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் சனி பகவான் தற்போது பயணம் செய்து வருகின்றார்.

அந்த வகையில் இருள் கிரகமாக விளங்கக்கூடிய சனிபகவானை நோக்கி சூரிய பகவான் பதினைந்து டிகிரிக்குள் வரும்பொழுது சனி பகவானின் அஸ்தமனம் ஏற்படுகிறது. இதன் காரணமாக வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி முதல் சனி பகவானின் அஸ்தமனம் தொடங்குகிறது. வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி வரை இந்த காலம் நீடிக்கின்றது. 

அந்த வகையில் சனி பகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் செல்வ யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

ரிஷப ராசி

சனி பகவானின் அஸ்தமனம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை பெற்று தரப்போகின்றது. எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள்.

காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தேவையில்லாமல் அதிகம் செலவு செய்வதை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடக ராசி

சனிபகவானின் அஸ்தமனத்தால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. அஷ்டம சனி உங்களுக்கு நடந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும் அஸ்தமனத்தால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்க போகின்றது. எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக இருக்கும். சிறப்பான பலன்கள் உங்களை தேடி வரும். தொழிலில் எதிர்பார்த்ததை விட உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். அதிக பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. இருப்பினும் நீங்கள் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

மீன ராசி

உங்கள் ராசிக்கு ஏழரை சனியின் விரைய சனி நடந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு சனி பகவானின் அஸ்தமனம் நல்ல நம்பிக்கையை கொடுக்கப் போகின்றது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மன கஷ்டம் மற்றும் கவலைகள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும்.

வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கக்கூடும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக உங்களுக்கு சிக்கல் கொடுத்து வந்த காரியங்கள் அனைத்தும் விலகிச் செல்லும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது குறையும். வாழ்க்கை துணையோடு உங்களுக்கு முழு ஆதரவு மற்றும் பிணைப்பு ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner