Budhan 2025: கோடி கோடியாக கொட்டும் புதன்.. இந்த ராசிகள் அசுர வளர்ச்சி பெறுவார்களா?.. பணமழை யாருக்கு?
Budhan 2025: புதன் பகவானின் தனுசு ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் பணக்கார யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Budhan 2025: நவகிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி, புத்திசாலித்தனம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் புதன் பகவான் கடந்த ஜனவரி 4-ம் தேதி அன்று தனுசு ராசிக்கு சென்றார். புதன் பகவானின் தனுசு ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் பணக்கார யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
சிம்ம ராசி
புதன் பகவான் இந்த தனுசு ராசி பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வணிகத்தின் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் கல்விகள் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
கன்னி ராசி
புதன் பகவானின் தனுசு ராசி பயணம் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணை முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் வெற்றி பெற்று முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் தீரும் நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடையும்.
துலாம் ராசி
புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையே அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. அனைவராலும் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதைய அதிகரிக்கும்.
செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். வணிகத்தில் இரட்டிப்பான லாபம் கிடைக்கும். எதிர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. பொருளாதாரத்தில் ஏற்பட்டு வந்த நெருக்கடிகள் அனைத்தும் குறையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். படிப்பிற்காக வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
