சம்பவத்திற்கு ரெடியான ராகு கேது.. இந்த ராசிகளுக்கு பணம் கொட்டும்-these are the zodiac sign people who get lucky due to rahu ketu - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சம்பவத்திற்கு ரெடியான ராகு கேது.. இந்த ராசிகளுக்கு பணம் கொட்டும்

சம்பவத்திற்கு ரெடியான ராகு கேது.. இந்த ராசிகளுக்கு பணம் கொட்டும்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 31, 2024 01:43 PM IST

Rahu Ketu: ராகு கேதுவால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்.

ராகு கேது
ராகு கேது

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் ராகு மற்றும் கேது கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தங்களது இடத்தை மாற்றினார்கள்.

ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர். கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர மாற்றமும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும் கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் இடம் மாற்றம் செய்துள்ளனர். இவர்களில் இடமாற்றத்தால் நல்ல பலன்களை பெறப்போகும் சில ராசிகளை இங்கே காண்போம்.

கும்ப ராசி

 

தற்போது சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். ராகு பகவானின் நட்சத்திர மாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். திடீரென்று எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். பேச்சு திறமையால் செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.

துலாம் ராசி

 

ராகு மற்றும் கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நினைத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். மங்களகரமான காரியங்கள் வீட்டில் நடக்கும். ராகு நட்சத்திர மாற்றம் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

ரிஷப ராசி

 

இந்த ஆண்டு உங்களுக்கு ராகு கேது சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வாழ்வில் இக்கட்டான சூழ்நிலைகளை கடந்த மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வணிகத்தில் அதிக வளர்ச்சி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மன தைரியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

டாபிக்ஸ்