தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி நட்சத்திர பெயர்ச்சி.. தொடங்கிவிட்டது பணமழை.. ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்..!

சனி நட்சத்திர பெயர்ச்சி.. தொடங்கிவிட்டது பணமழை.. ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 11, 2024 04:44 PM IST

சனிபகவான் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். அது குரு பகவானின் நட்சத்திரமாக இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப்படுகின்றனர்.

சனி நட்சத்திர பெயர்ச்சி
சனி நட்சத்திர பெயர்ச்சி

தற்போது சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் இது இவருடைய சொந்தமான ராசி ஆகும். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சனிபகவான் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். அது குரு பகவானின் நட்சத்திரமாக இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப்படுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபமாக அமைந்துள்ளது பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வசதிகள் உங்களைத் தேடி வரும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

ரிஷப ராசி

 

சனிபகவானால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

மிதுன ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு மங்கல யோகத்தை பெற்று தரும். ஏப்ரல் மாத முதல் அதிர்ஷ்டம் உங்களை தேடி வர போகின்றது. அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடன் வேலை செய்பவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel