தமிழ் செய்திகள்  /  Astrology  /  These Are The Rasis Who Get Rajayoga Due To The Conjunction Of Saturn And Sun

Sani Suriyan: சனியுடன் கைக்கோர்த்த சூரியன்..3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 02, 2024 09:39 AM IST

Saturn and Sun: சனியும் சூரியனும் சேர்ந்ததால் ராஜயோகத்தை பெற்ற ராசிகள் இவர்கள்தான்.

சனி மற்றும் சூரியன்
சனி மற்றும் சூரியன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த திருநாள் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாகவும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. நவகிரகங்களில் மீதமான விளங்கக்கூடியவர் சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை நிகராக திருப்பிக் கொடுக்க கூடியவர்.

கர்ம வினைகளை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பதால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார் சனி பகவான்.

பிப்ரவரி மாத தொடக்கத்தில் சூரிய பகவான் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதன் காரணமாக சனிபகவான் மற்றும் சூரிய பகவான் இருவரும் இணைய போகின்றனர். இவர்களின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் மூன்று ராசிக்காரர்கள் ராஜ யோகத்தை பெறுகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளவும்.

கும்ப ராசி

சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அவருடைய இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான யோகத்தை கொடுக்கப் போகின்றது. இந்த நேரத்தில் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

ஆன்மீகம் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் ராசியின் ஏழாவது வீட்டில் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருவதால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத் தரும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

தனுசு ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளார். உங்கள் ஜாதகத்தின் மூன்றாவது வீட்டை அவர் பார்க்கப் போகின்ற காரணத்தினால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கப்படும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. பூர்விக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்களால் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

சிம்ம ராசி 

 

சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய போகின்றார். உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கக்கூடிய சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பார். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். புதிய முயற்சிகள் நல்ல பலன்களை பெற்று தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாக்கும். கூட்டு முயற்சிகள் வெற்றியை தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்