Rahu and Mars: முடிஞ்சு போச்சு.. செவ்வாய் ராகு சேர்க்கையால் அங்காரக யோகம்.. தலை விரித்து ஆடப்போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu And Mars: முடிஞ்சு போச்சு.. செவ்வாய் ராகு சேர்க்கையால் அங்காரக யோகம்.. தலை விரித்து ஆடப்போகும் ராசிகள்

Rahu and Mars: முடிஞ்சு போச்சு.. செவ்வாய் ராகு சேர்க்கையால் அங்காரக யோகம்.. தலை விரித்து ஆடப்போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 01, 2024 02:56 PM IST

Rahu and Mars: மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் செவ்வாய் மற்றும் ராகு இவர்கள் இருவரும் சேர்ந்து பயணம் செய்ய உள்ளனர். இதனால் அங்காரக யோகம் உருவாக்கியது. இந்த யோகம் சில ராசிகளுக்கு மோசமான பலன்களை கொடுக்கப் போகின்றது.

செவ்வாய் ராகு
செவ்வாய் ராகு

இது போன்ற போட்டோக்கள்

கிரகங்கள் அவ்வப்போது நகரும்போது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றும் பொழுது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு சேர்ந்து பயணம் செய்யக்கூடிய சூழ்நிலை அமையும். அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான். ஏப்ரல் 23ஆம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் செவ்வாய் மற்றும் ராகு இவர்கள் இருவரும் சேர்ந்து பயணம் செய்ய உள்ளனர். இதனால் அங்காரக யோகம் உருவாக்கியது. இந்த யோகம் சில ராசிகளுக்கு மோசமான பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

அங்காரக யோகம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்த உள்ளது. குடும்பத்தில் மற்றவர்களிடம் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் படுமோசமான சூழ்நிலை உருவாகும். வாழ்க்கைத் துணையோடு வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களுடன் சண்டை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த காலத்தில் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம் ராசி

 

உங்களுக்கு அங்காரக யோகம் உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. நீதிமன்ற வழக்குகளில் நீங்கள் தோல்வியை சந்திக்கக்கூடிய சூழ்நிலை அமையும். மன உறுதி குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள் புதிய சவால்கள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளிடமிருந்து சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் அங்காரக யோகம் எட்டாவது வீட்டில் உருவாகி உள்ள காரணத்தினால் உங்களுக்கு விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையற்ற செலவுகளை குறித்துக்கொள்வது நல்லது. புதிய வாய்ப்புகள் உங்களை கேடு வரசட்டு தாமதமாகும். எடுத்துக் காரியங்கள் முடிவதற்கு சற்று தாமதம் ஆகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்கக்கூடிய சூழ்நிலை அமையும். கடன் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner