தமிழ் செய்திகள்  /  Astrology  /  These Are The People Of The Zodiac Who Have Received The Love Of Lord Saturn

Shani Favorite Rasis: சனி பகவானின் ஆசி பெற்ற ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 05, 2024 10:45 AM IST

சனிபகவானின் அன்பை பெற்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்.

சனிபகவான்
சனிபகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நீதியின் கடவுளாக சனி பகவான் விளங்கி வருகிறார். தனக்கென சில ராசிகளை வைத்திருந்தாலும் சனி பகவானுக்கு என பிடித்தமான அதிர்ஷ்ட ராசிகள் சில உள்ளன அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

சனிபகவானின் நண்பனாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். சுக்கிர பகவானின் சொந்த ராசியாக நீங்கள் உள்ளீர்கள். சனிபகவான் உங்களுக்கு ஒருபோதும் துன்பத்தை கொடுப்பது கிடையாது. அதேபோல அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் கொடுத்து வருகிறார். அதிகபட்ச பாதகமான சூழ்நிலைகளை உங்களுக்கு கொடுப்பது கிடையாது. சனி பகவானின் ஆசி பெற்ற ராசிகளில் நீங்களும் ஒருவர்.

கடக ராசி

 

நீங்கள் சந்திர பகவானை அதிபதியாகக் கொண்டவர்கள். சந்திர பகவானை எதிரியாக கொண்ட மற்ற கிரகங்கள் எத்தனையோ இருந்தாலும் சந்திரன் யாரையும் எதிரியாக பார்ப்பது கிடையாது. அதன் காரணமாக சனி பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு. கடின உழைப்பால் முன்னேற நினைக்கும் உங்களுக்கு சனி பகவான் எப்போதும் உதவியாக இருப்பார்.

துலாம் ராசி

 

சனி பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகளில் நீங்களும் ஒருவர். சிறப்பான வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார். உயர்ந்த நிலையை சனி பகவான் உங்களுக்கு கொடுப்பார். எத்தனை பாதகங்கள் வந்தாலும் அதை சனி பகவான் நிவர்த்தி செய்வார்.

மகர ராசி

 

சனிபகவான் உங்களுக்கு முழு ஆசியையும் கொடுக்க போகின்றார். சனி பகவானின் சிறப்பான பலன்கள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும். சிக்கல்கள் அனைத்தும் வந்தாலும் சனிபகவான் ஒற்றை ஆளாய் உங்களை காப்பாற்றுவார். தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுப்பார். சனிபகவானின் ஆசிர்வாதம் பெற்ற ராசிகளில் நீங்களும் ஒருவர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்