Lord Mars: கஷ்டப்படப் போகும் ராசிகள்.. செவ்வாய் வந்து விட்டார்
செவ்வாய் பகவானிடம் சிக்கிக்கொண்ட ராசிக்காரர்கள் இவர்கள்தான்.
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார் இவர் தன்னம்பிக்கை தைரியம் விடாமுயற்சி வீரமுள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகிறார்.
செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். இவர் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. செவ்வாய் பகவான் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அன்று தனுசு ராசிக்கு உள் நுழைந்தார்.
இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
செவ்வாயின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போவதில்லை. எதிர்பாராத நேரத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும் .உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுன ராசி
செவ்வாய் பகவான் உங்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தப் போகின்றார் வாழ்க்கைத் துணையோடு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் சற்று சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களாக சங்கடங்கள் ஏற்படும். சில மோசமான சூழ்நிலை உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
விருச்சிக ராசி
உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் பகவான் உங்களுக்கு சிக்கல்களை கொடுக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் தெளிவாக இருக்க வேண்டும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
மகர ராசி
செவ்வாய் பகவானின் தாக்கம் உங்கள் ராசியில் இருக்கப் போகின்றது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தொலைதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்