Tamil News  /  Astrology  /  These Are The People Of The Zodiac Who Are Going To Face Troubles Due To Lord Mercury

Mercury: புதன் பகவான் சுழற்றி எடுக்கப் போகிறார்.. இந்த ராசிகள் ஓடுங்க

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 06, 2024 04:58 PM IST

புதன் பகவானால் சங்கடங்களை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது ஏனென்றால் நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். புதன் பகவான் தற்போது பின்னோக்கிய பயணத்தில் வக்கிர நிலையில் இருந்து வருகிறார்.

தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார் இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி 

 

புதன் பகவான் உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருக்கின்றார். உங்களுக்கு சில சங்கடமான சூழ்நிலைகள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை குறைய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷப ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருக்கின்றார். பண விரயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடன் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வார்த்தைகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் சற்று மந்தமாக இருப்பார்கள். வியாபாரம் மற்றும் தொழில் சட்டமன்றமாக இருக்கும்.

மேஷ ராசி

 

கணவன் மனைவிக்கு இடையே சில சிக்கல்கள் ஏற்பட உள்ளது. ஏனென்றால் அதன் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாம் வீட்டில் செஞ்சாரம் செய்து வருகிறார். இவருடைய பின்னோக்கிய பயணத்தால் உங்களுக்கு சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதிகப்படியான பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.