தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பஞ்சத்தில் முரட்டு அடி.. விரட்டியடிக்க போகும் செவ்வாய்.. தப்பித்துக்கொள்ள வேண்டிய ராசிகள்.. சிக்கியது யார்?

பஞ்சத்தில் முரட்டு அடி.. விரட்டியடிக்க போகும் செவ்வாய்.. தப்பித்துக்கொள்ள வேண்டிய ராசிகள்.. சிக்கியது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 18, 2024 03:43 PM IST

Lord Mars: செவ்வாய் பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார் வரும் மேப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகிறார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

செவ்வாய்
செவ்வாய்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் உண்டாகும்.

அந்த வகையில் செவ்வாய் பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார் வரும் மேப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகிறார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. புதிய திட்டங்களில் பல்வேறு விதமான சவால்கள் ஏற்படும் மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய பேச்சால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு லாபம் இருக்காது. நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்று செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் நுழையப் போகின்றார். இதனால் நீங்கள் மற்றவர்களிடத்தில் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் வாக்குவாதம் செய்வது உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய தொழில் தொடங்குவதற்கு தற்போது சாதகமான சூழல் கிடையாது. நிதி ரீதியாக நீங்கள் மிகவும் சிக்கல்களை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

மகர ராசி

 

உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டில் செவ்வாய் நுழையப் போகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான தடைகளில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எதிர்மறையான எண்ணங்கள் உங்களுக்கு அதிகம் தோன்றுவதற்கான சூழ்நிலைகள் அதிகம் அமையும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தராது. வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் தொழிலில் சில நஷ்டங்களை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களோடு கருத்து வேறுபாடுகள் இருப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel