தமிழ் செய்திகள்  /  Astrology  /  These Are The Female Zodiac Signs Who Are Greedy By Birth

இயற்கையாகவே பேராசை அதிகம் கொண்ட பெண் ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 31, 2024 06:00 PM IST

Astrology: பிறப்பிலேயே பேராசை கொண்ட பெண் ராசிக்காரர்கள் இவர்கள்தான்.

பேராசை கொண்ட பெண் ராசிக்காரர்கள்
பேராசை கொண்ட பெண் ராசிக்காரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

அனைவரிடத்திலும் ஆசை கட்டாயம் இருக்கும். அது பேராசையாக மாறும் பொழுது ஒரு மோசமான குணமாக உருவெடுக்கின்றது. சில பேராசைகள் தீய பயணத்திற்கு வழி வகுக்கும். வாழ்க்கை மோசமான நிலைமைக்கு மாறுவதற்கு காரணமே இந்த பேராசை தான்.

கிரக அமைப்புகளின் அடிப்படையிலும், அதனை ஆளுமை நடத்துகின்ற கிரகத்தின் செயல்பாடுகளினாலும் சில ராசிக்காரர்கள் பிறப்பிலேயே பேராசை கொண்டவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக சில ராசி கொண்ட பெண்கள் பிறப்பிலேயே பேராசை என்னும் அதிகமாக உள்ளவர்களாக திகழ்ந்தவர்கள். அப்படிப்பட்ட ராசிக்காரர்களை இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

பேராசை கொண்ட ராசுக்காரர்கள் நீங்களும் ஒருவர் குறிப்பாக இந்த ராசி கொண்ட பெண்கள் அதிகம் பேராசை கொண்டவர்களாக இருப்பார்கள். தான் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் குறிப்பாக செயல்படுவார்கள். திட்டமிட்டபடி தனது ஆசையை நிறைவேற்றுவதில் எந்த ஆழத்திற்கு வேண்டுமானாலும் செல்வார்கள். சில அங்கீகாரத்தை பெறுவதற்காக இந்த ராசி கொண்ட பெண்கள் தனது ஆசையை பேராசையாக மாற்றிக் கொள்கிறார்கள்.

விருச்சிக ராசி

 

இந்த ராசிக்கார பெண்கள் அதீத ஆர்வம் கொண்டவர்கள். விரைவில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக நீங்கள் உள்ளீர்கள் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள் ஆசைகள் வரும் போது அதனை வெற்றியடைய பேராசை கொண்டு செயல்படுவீர்கள். உங்களுடைய வளர்ச்சியின் மீது அதிக பேராசை கொண்டவர்களாக திகழ்வதால் சில நேரங்களில் அது சிக்கல்களையும் ஏற்படுத்தும்.

மகர ராசி

 

ஒழுக்கம் மற்றும் லட்சியத்தை குறிக்கும் ராசியாக நீங்கள் விளங்கி வரும் இந்த ராசி கொண்ட பெண்கள் மிகவும் பாதுகாப்பு மீது அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள் தங்களது பொருள் மீது எவரையும் கை வைக்க விட மாட்டார்கள். பொருள் சேகரிப்பில் அதிக பேராசை கொண்டவர்களாக விளங்கி வருகின்றீர்கள். உங்கள் பேராசை மற்றவர்களுக்கு தவறான சிந்தனையை உருவாக்கலாம்.

சிம்ம ராசி

 

இயல்பாகவே தனித்துவமான திறமை கொண்டவர்கள் நீங்கள். அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடிய திறன் கொண்டவர்கள். நீங்கள் எப்போதும் தனது சுய வேலைகளில் அதிக பேராசை கொண்டவர்களாக திகழ்ந்து வருகின்றீர்கள். குறிப்பாக புகழ் மற்றும் பாராட்டுக்கள் மீது உங்களுக்கு அதிக கவனம் இருக்கும். அதனை முன்னிறுத்தி நீங்கள் செய்யும் செயல் அனைத்தும் மற்றவர்களுக்கு பேராசையாக தெரியும். நீங்களும் பேராசையோடு தான் அந்த காரியத்தில் செயல்படுவீர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.