Dream Shastra: நன்மை, பணபலன்கள், நிதி ஆதாயம்..! நல்ல அறிகுறிகளை வெளிப்படுத்தும் கனவுகள் இவைதான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Dream Shastra: நன்மை, பணபலன்கள், நிதி ஆதாயம்..! நல்ல அறிகுறிகளை வெளிப்படுத்தும் கனவுகள் இவைதான்

Dream Shastra: நன்மை, பணபலன்கள், நிதி ஆதாயம்..! நல்ல அறிகுறிகளை வெளிப்படுத்தும் கனவுகள் இவைதான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jul 13, 2024 09:50 PM IST

கனவு சாஸ்திரத்தில் நன்மை, பணபலன்கள், நிதி ஆதாயம் போன்ற நல்ல அறிகுறிகளை வெளிப்படுத்தும் கனவுகள் எவையெல்லாம் என்பது பற்றி பார்க்கலாம்.

நன்மை, பணபலன்கள், நிதி ஆதாயம் என நல்ல அறிகுறிகளை வெளிப்படுத்தும் கனவுகள் இவைதான்
நன்மை, பணபலன்கள், நிதி ஆதாயம் என நல்ல அறிகுறிகளை வெளிப்படுத்தும் கனவுகள் இவைதான்

இது போன்ற போட்டோக்கள்

நாம் வாழ்க்கையில் ஏற்பட இருக்கும் சில அறிகுறிகள் கனவுகளில் மூலம் வெளிப்படும் என கனவு சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதாவது எதிர்காலத்தில் நடக்க இருக்கும் விஷயங்கள், நிகழ்வுகள் கூட கனவுகள் மூலம் பிரதிபலிப்பாகு் எனவும் கூறப்படுகிறது. கனவில் காணப்படும் சில அறிகுறிகள் மனித வாழ்க்கையை பாதிக்கிறது என்று கனவு அறிவியல் கூறுகிறது.

கனவில் நாம் பார்க்கும் பொருள்கள், தோன்றும் விஷயங்களுக்கென அர்த்தங்கள் இருக்கின்றன. அந்த வகையில் கனவில் மாடு, குதிரை செல்வது, கடவுள் பார்ப்பது, மழை பொழிவது, நிலா தோன்றுவது, தலைமுடி வந்தால் என்ன அர்த்தம் என்பதை பார்க்கலாம்

மாடு கனவில் வந்தால்

கனவில் மாடு வருவது போல் தோன்றினால் நன்மை நடக்கும் என்று அர்த்தம். மாடு இந்து மதத்தில் கடவுளாக பார்க்கப்படுகிறது. அதனால்தான் பசுவைப் பார்ப்பது மிகவும் புண்ணியமாகும்.

கனவில் மாடு வந்தால் மகிழ்ச்சியான செய்திகள் வரும். குழந்தை பிறந்ததற்கான அறிகுறி. நீங்கள் செய்த பல்வேறு பணிகள் வெற்றிகரமாக முடிவடையும் என்பதற்கான அறிகுறியாகும்

கடவுள் கனவில் வந்தால்

உங்கள் கனவில் ஏதாவது தெய்வம் வந்தால், கஷ்டங்கள் அனைத்தும் விரைவில் நீங்கும் என்பது அர்த்தம். இந்த கனவு வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருகிறது. விரைவில் நல்லது நடக்க போவதை குறிக்கிறது.

குதிரையில் செல்வது போல் கனவு வந்தால்

உங்கள் கனவில் குதிரை சவாரி செய்வதை நீங்கள் கண்டால், ஏதோ ஒரு நல்ல காரியம் நடக்கப் போகிறது என்று அர்த்தம். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும்.

இந்த கனவு வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தை குறிக்கிறது. ஒரு கனவில் குதிரையைப் பார்ப்பது ஒரு நல்ல அறிகுறியாகக் கருதப்படுகிறது.

கனவில் மழை பொழிவதை கண்டால்

கனவில் இருள், மேகங்கள் சூழ்ந்து மழை பொழிவதை கண்டால் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. முதலீடுகளால் பண பலன்களும், திடீர் நிதி ஆதாயமும் ஏற்படும். வாழ்வில் வளம் பெருகும். கனவில் மழையைக் கண்டால் வாழ்வில் அழகான துணை கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

கனவில் நிலா தோன்றினால்

நிலவு குளிர்ச்சி மற்றும் அமைதியின் சின்னமாக கருதப்படுகிறது. கனவில் நிலவை பார்ப்பது மிகவும் நல்லது. வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற வாய்ப்புகள் இருப்பதைக் குறிக்கிறது. மேலும் சமூகத்தில் கௌரவம், அந்தஸ்தும் உயரும்

கனவில் தலைமுடி, நகங்கள் வெட்டப்படுவது போல் வந்தால்

உங்கள் கனவில் நகங்கள் வெட்டப்பட்டதை நீங்கள் கண்டால், அது ஒரு நல்ல அறிகுறியாகும். இது உங்கள் திட்டங்களில் ஒன்று வெற்றி பெறும் என்பதற்கான அறிகுறியாகும். கடன்களில் இருந்து விடுபடுவீர்கள் என்று அர்த்தமாகும்.

ஆனால் முடி வெட்டப்பட்டதாக வந்தால் அது நல்லதல்ல. இது செலவு அதிகரிக்கும் என்பதை குறிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

பொறுப்புதுறப்பு: மேலே கொடுக்கப்பட்ட தகவல்கள் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இணையத்தில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில். இது தகவலுக்காக மட்டுமே. மேலே உள்ளவற்றுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் எந்தப் பொறுப்பையும் ஏற்காது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட நிபுணர்களை அணுகவும்