Guru Peyarchi: குருபகவானால் இந்த ஏழு ராசிகளுக்கு விரைவில் “டும் டும் டும்”
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi: குருபகவானால் இந்த ஏழு ராசிகளுக்கு விரைவில் “டும் டும் டும்”

Guru Peyarchi: குருபகவானால் இந்த ஏழு ராசிகளுக்கு விரைவில் “டும் டும் டும்”

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 30, 2023 07:22 AM IST

குருபகவானின் சஞ்சாரத்தால் திருமண பாக்கியம் உண்டாகும் 7 ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

குருப்பெயர்ச்சி
குருப்பெயர்ச்சி

இந்த ஆண்டு குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குருவின் பார்வை சில ராசிகளின் மீது நேரடியாக விழுகின்ற காரணத்தினால் அவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும் என ஜோதிடம் கூறுகிறது.

திருமணமாகாமல், சரியான வரன் கிடைக்காமல் பல காரணங்களால் தடைப்பட்டு விரக்தியில் இருக்கும் இந்த ஏழு ராசிகளுக்கு குரு பகவானால் இந்த ஆண்டு திருமணம் நடக்கும் எனக் கூறப்படுகிறது.

மேஷ ராசி

உங்கள் ஜாதகத்தில் ஜென்மத்தில் ராகு பகவானும், ஏழாவது இடத்தில் கேதுவும் இருந்து திருமணத் தடை கொடுத்து வந்தனர். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குருபகவான் ஏழாவது வீட்டை நேரடியாகப் பார்ப்பதால் இதற்குப் பிறகு உங்கள் ஜாதகத்தில் இருந்து திருமணத்தடை விலகும். வெற்றிகரமான திருமண வாழ்க்கை அமையும்.

மிதுன ராசி

தற்போது அஷ்டமா சனி காலம் முடிவடைந்த நிலையில், உங்கள் ராசிக்கு இந்த குருப்பெயர்ச்சியால் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். குருபகவான் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இதுவரை உங்கள் வாழ்க்கையில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் நீங்கி கோடீஸ்வர யோகம் பெறக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

சிம்ம ராசி

குருப்பெயர்ச்சி உங்கள் ராசிக்கு மிகப்பெரிய பலன்களை அள்ளித் தரப் போகிறது. பணவரவில் எந்த சிக்கல்களும் இனிமேல் இருக்காது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். சனிபகவானின் பார்வை ஏழாம் இடத்தில் இருப்பதால் சில சிக்கல்கள் ஏற்பட்டாலும், குருபகவானால் திருமணம் யோகம் கைக்கூலி வரும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஏழாம் வீட்டில் குரு பகவான் சஞ்சரிப்பதால் திருமணத் தடை விலகும். இதுவரை ஜென்மத்தில் கேது பகவானும், ஏழாம் இடத்தில் ராகு பகவானும் ஏற்படுத்தி வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். உங்கள் ராசியைப் பொறுத்தளவில் கட்டாயம் திருமணம் பாக்கியம் உண்டாகும் எனக் கூறப்படுகிறது.

தனுசு ராசி

உங்கள் ராசியில் ஏழரைச் சனி முடிவடைந்து விட்டது. குரு பகவான் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குடி பெயர்ந்துள்ளார். ஒன்பதாம் இடத்தில் அவரது பார்வை கிடைக்கப் போகின்ற காரணத்தினால் அமோகமான திருமண வாய்ப்புகள் உண்டாகும் என கூறப்படுகிறது.

கும்ப ராசி

உங்கள் ராசியை பொறுத்தவரை தற்போது ஜென்ம சனி காலமாகும். இளம் வீட்டில் குருவின் பார்வை விழுவதால் சிக்கல்கள் ஏற்பட்டாலும் திருமணத்தில் எந்த தடையும் ஏற்படாது. குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

மீன ராசி

இந்த ஆண்டு குரு பகவான் உங்கள் ராசியில் இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது. குரு பகவான் குடும்பஸ்தானத்தில் இருப்பதால் இதுவரை இருந்த திருமண சிக்கல்கள் நீங்கும். விரைவில் திருமணம் நடக்கும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

 

 

Whats_app_banner