சூரிய பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசிக்கு செல்லும் சூரியன்.. இன்று முதல் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகிறது
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சூரிய பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசிக்கு செல்லும் சூரியன்.. இன்று முதல் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகிறது

சூரிய பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசிக்கு செல்லும் சூரியன்.. இன்று முதல் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகிறது

Karthikeyan S HT Tamil
Published Apr 14, 2025 11:08 AM IST

சூரிய பெயர்ச்சி பலன்கள்: வேத ஜோதிடத்தில் சூரிய பகவான் அனைத்து கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். தமிழ் புத்தாண்டான இன்று (ஏப்ரல் 14) சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழைய இருக்கிறார். இந்த சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் மூன்று ராசிகள் பற்றி பார்ப்போம்.

சூரிய பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசிக்கு செல்லும் சூரியன்.. இன்று முதல் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகிறது
சூரிய பெயர்ச்சி பலன்கள்: மேஷ ராசிக்கு செல்லும் சூரியன்.. இன்று முதல் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகிறது

இது போன்ற போட்டோக்கள்

சூரிய பகவான் மேஷ ராசிக்குள் நுழைவது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வேத ஜோதிடம் கூறுகிறது. இருப்பினும் இந்த ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கப்போகிறது என்று நம்பப்படுகிறது. மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சியாவது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எந்த விதமான பலன்களைத் தரும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மேஷம்

சூரிய பகவான் மேஷ ராசிக்குள் நுழைவதால், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் நல்ல முன்னேற்றத்தை தரும். ஆரோக்கியமும் மேம்படும்.

மிதுனம்

சூரிய பகவானின் ராசி மாற்றத்தால் மிதுன ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகப் பணியில் இருப்பவர்கள் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகள் முடிவடையும். பொருளாதார நிலை மேம்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்மம்

சூரிய பகவான் மேஷ ராசிக்கு செல்வதால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பியதை அடைய வாய்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் எதிர்கொண்ட முக்கிய தடைகள் நீங்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய உச்சத்தை அடைய அவர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

கன்னி

சூரிய பகவானின் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது. வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் சூழல் உருவாகும். அதிர்ஷ்டம் எல்லா வகையிலும் துணை நிற்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். பூர்வீக சொத்து மூலம் செல்வம் அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். வானொலி, டிஜிட்டல் ஊடகங்களில் 13+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், கல்வி வானொலி ஞானவாணி, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா தமிழ், டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner