’துறவு, ஆன்மீகம், தெய்வீகம்!’ இந்த 4 ராசிகளை சேந்தவர்களுக்கு துறவு மீது அதிக ஈடுபாடு இருக்கும்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’துறவு, ஆன்மீகம், தெய்வீகம்!’ இந்த 4 ராசிகளை சேந்தவர்களுக்கு துறவு மீது அதிக ஈடுபாடு இருக்கும்!

’துறவு, ஆன்மீகம், தெய்வீகம்!’ இந்த 4 ராசிகளை சேந்தவர்களுக்கு துறவு மீது அதிக ஈடுபாடு இருக்கும்!

Kathiravan V HT Tamil
Published Dec 05, 2024 07:00 AM IST

குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் ஆன்மீகம் மற்றும் துறவு மீது அதிக ஈடுபாடு கொண்டு இருப்பார்கள். இவர்களுக்கு உலக ஆசைகள், இன்பம், சுகம் ஆகியவற்றில் நாட்டம் குறைவாக இருக்கும். ஆன்மீகம், வழிபாடு, தியானம், யோகா மீது இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும்.

’துறவு, ஆன்மீகம், தெய்வீகம்!’ இந்த 4 ராசிகளை சேந்தவர்களுக்கு துறவு மீது அதிக ஈடுபாடு இருக்கும்!
’துறவு, ஆன்மீகம், தெய்வீகம்!’ இந்த 4 ராசிகளை சேந்தவர்களுக்கு துறவு மீது அதிக ஈடுபாடு இருக்கும்! (PC: Pixabay)

இது போன்ற போட்டோக்கள்

துறவரத்தில் ஆர்வம் கொண்ட ராசிகள்:-

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கும்பம், தனுசு, மகரம், கடகம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளை சேந்தவர்களுக்கு ஆன்மீகம் மற்றும் துறவறம் மீது ஆர்வம் அதிகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீக ஈடுபாடும், சேவை மனப்பான்மையும் இயல்பிலேயே இருக்கும். 

கும்பம்

கும்பம் ராசியை சேர்ந்தவர்களுக்கு இயற்கையாகவே ஆன்மீக ஈடுபாடு அதிகம் கொண்டவர்களாக விளங்குவார்கள். இவர்களின் சிந்தனைகள் பொதுவாக சமூகம், உலகம், அறிவு போன்ற விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக இருக்கும். மனித உரிமைகள், சமய நம்பிக்மை, ஆன்மீக வாழ்க்கை முறையில் கூடுதல் ஈடுபாடு காட்டுவார்கள். இந்த ராசியை சேர்ந்த பலரும் பற்றற்ற எண்ணங்களை வெளிப்படுத்துவார்கள். 

தனுசு

குரு பகவானை அதிபதியாக கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே தத்துவம் மற்றும் ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். உண்மை மற்றும் நேர்மையை இவர்கள் பெரிதும் போற்றுவார்கள். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் வெளிப்புற மகிழ்ச்சியை விட அக அமைதிக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். சுயபரிசோதனை, தியானம் அல்லது பிற ஆன்மீக நடைமுறைகளை விரும்பி செய்வார்கள். 

மகரம்

சனி பகவானை அதிபதியாக கொண்ட மகரம் ராசிக்காரர்கள் இயற்கையாகவே கடின உழைப்பாளிகள். இவர்களது உள் மனம் கேள்விகளிலும் ஆன்மீக நாட்டங்களிலும் அதிக ஈடுபாட்டை கொண்டு இருக்கும். மது உள்ளிட்ட போதை வஸ்துகளை இவர்களில் பெரும்பாலும் தவிர்ப்பார்கள். சமூகத்தின் நடத்தை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி பற்றி தத்துவார்த்த சிந்தனைகளை இவர்கள் கொண்டு இருப்பார்கள். இது மட்டுமின்றி ஆன்மீக இலக்குகளை அடைவதற்கான சிந்தனை இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும். 

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் இருக்கும். அமைதி, சுதந்திரம், தெய்வீக பார்வை பற்றிய சிந்தனை இவர்களுக்கு உண்டு. பௌதிக உலகில் தாங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் மற்றும் கஷ்டங்களால் இவர்களுக்கு பற்றற்ற நிலைக்கு செல்ல விரும்புவார்கள். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்