தமிழ் செய்திகள்  /  Astrology  /  Thease Zodiac Signs Most Likely To Get Married After Valentines Day In 2024

Wedding Luck: காதலர் தினம் முடிந்த பிறகு திருமண யோகம் கைகூடும் ராசிக்காரர்கள் யார் யார்?

Karthikeyan S HT Tamil
Feb 11, 2024 01:39 PM IST

காதலர் தின வாரம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்தாண்டு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை பார்க்கலாம்.

ராசி (கோப்புபடம்)
ராசி (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

அந்தவகையில்,2024 பிப்ரவரி காதலர் தினத்துக்குப் பிறகு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் யோகம் கைகூடி வரப்போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்

தன்னை எதிரியாக நினைத்தவர்களுக்கும் நல்லதே நினைக்கும் குணம் படைத்த மிதுன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு திருமண வாய்ப்புகள் கைகூடும். இது தான் உங்களுக்கு உகந்த நேரம். இந்த காலகட்டத்தில் நீங்கள் வியாழனின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள். இதனால் நீங்கள் விரும்பிய நபரை திருமணம் செய்து கொள்ளலாம்.

சிம்மம்

யாருக்காகவும் கொள்கைகளை விட்டுக்கொடுக்காத சிம்ம ராசியினருக்கு இந்தாண்டு திருமணத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. சிம்ம ராசியினர் ஒரு காதல் திருமணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையில் சிறப்பு வாய்ந்த ஒருவர் வாழ்க்கை துணையாக அமைவார்.

துலாம்

யாருக்கும் தீங்கு நினைக்காத துலாம் ராசிக்காரர்களுக்கு 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வியாழன் 7 ஆம் வீட்டில் இருந்து சரியான திசையைத் தருவார். இதனால், ஆண்டின் முதல் பாதியில் திருமணத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. இது உங்களுக்கு சரியான நேரம். காதலர்களுக்கு ஆண்டின் முதல் பாதி மிகவும் சாதகமான அம்சமாக இருக்கிறது.

விருச்சிகம்

மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவர்களாக திகழும் விருச்சிக ராசி அன்பர்களே உங்களுக்கு ஆண்டின் இரண்டாம் பாதி திருமணத்திற்கு சாதகமான பலன்களை தரும். ஆண்டின் முதல் பாதியில் 5 ஆம் வீட்டில் ராகு உங்கள் காதல் உணர்வுகளை அதிகரிக்கும். இது காதல் திருமணத்திற்கும் தூண்டும். 2024 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி தேவகுரு வியாழன் 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் திருமணத்திற்கு ஏற்ற காலமாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்தாண்டு ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்கள் திருமணத்திற்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணையைப் கரம்பிடிப்பதற்கு காதலர் தினத்திற்குப் பிறகு மார்ச் முதல் ஏப்ரல் மற்றும் மே, ஜூன் வரையிலான காலம் சாதகமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு காதலர்களுக்கு காதல் திருமணமும் கைகூடும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்