தமிழ் செய்திகள்  /  Astrology  /  The Zodiac Signs That Will Remove The Barrier To Marriage Due To The Formed Kethara Rajayoga

Kethara Rajayoga: உருவான கேதார ராஜயோகம்: திருமணத்தடை நீங்கப்போகும் ராசிகள்

Marimuthu M HT Tamil
Jan 27, 2024 05:55 PM IST

உருவான கேதார ராஜயோகத்தால் திருமணத்தடை நீங்கப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

உருவான கேதார ராஜயோகம்: திருமணத்தடை நீங்கப்போகும் ராசிகள்.
உருவான கேதார ராஜயோகம்: திருமணத்தடை நீங்கப்போகும் ராசிகள்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேஷம்: தற்போது உருவாகியுள்ள கேதார ராஜயோகத்தால் மேஷ ராசியினருக்கு இத்தனை நாட்களாக இருந்த தடங்கல்கள் நீங்கும். வெகுநாட்களாக வீடு கட்ட நினைத்தவர்களுக்கு அதைக் கட்டும் யோகம் வாய்க்கும். அயல்நாடு செல்ல முயற்சித்தால் வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்: இந்த ராசியினருக்கு உருவாகியுள்ள கேதார ராஜயோகத்தால் தொழில் செய்பவர்களுக்கு நற்பலன் கிடைக்கும். குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிட்டும். காதலிப்பவர்கள், இந்த காலகட்டத்தில் பெற்றோரின் அனுமதியைப் பெறுவது எளிது.

துலாம்: இந்த ராசியினருக்கு உருவாகியுள்ள கேதார ராஜயோகத்தால் ஸ்போர்ட்ஸ் மற்றும் சினிமாவில் இயக்குநர்களாக முயற்சிப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். பதவியின்றி இருக்கும் கட்சித்தொண்டர்களுக்கு புதிய பொறுப்பு தேடி வரும். மேடை வரை வந்து திருமணம் தட்டிப்போனவர்களுக்குக்கூட, திருமணம் கைகூடும். குழந்தையில்லாதவர்களுக்குக் குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்புள்ளது. நினைவுத்திறன் அதிகரிப்பதால், மாணவர்கள் நன்கு படிப்பர்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்