Sani Bhagavan : சனியால் வரும் அதிர்ஷ்டம் - ஜம்முன்னு வாழப்போகும் ராசிகள்
சனியால் உண்டாகும் அதிர்ஷ்டத்தால் ஜம்முன்னு வாழப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.
பொங்கலை ஒட்டி, 75 ஆண்டுகளுக்குப் பின் சனி பகவானால் சில ராசியினருக்கு வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். தற்போது கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானால், வீட்டில் சில ராசியினருக்கு வளம் அதிகரிக்கிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்துக் காண்போம்.
மேஷம்: இந்த ராசிக்கு பொங்கலுக்குப் பின் சொத்துகளை வாங்கும் யோகம் உள்ளது. நீண்டநாட்களாக குழந்தையில்லாமல் தவிக்கும் தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். பணியிடத்தில் நற்பெயர் உண்டாகும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரலாம். பொங்கலுக்குப் பின், மேஷ ராசியினருக்கு செல்வம் கொழிக்கும்.
ரிஷபம்: இந்த ராசியினருக்கு பணியிடத்தில் இருந்த அரசியலால் உண்டான சிக்கல் விலகும். திருமணத்தடை நீங்கும். வேலை கிடைக்காதவர்களுக்கு நல்லவேலையே கிடைக்கும். வீட்டில் உற்சாகம் கரைபுரளும்.
கடகம்: வெகுநாட்களாக உங்களைப் பற்றி சிலர் வைத்த கெட்ட எண்ணங்கள் மாறும். வங்கியில் உங்கள் சேமிப்புக் கணக்கில் இருப்பு அதிகரிக்கும்.
சிம்மம்: சனி பகவானால் பொங்கலுக்குப் பின், நீண்டநாட்களாக வராமல் இருந்த பணம் வந்துசேரும். உடல் ரீதியாக இருந்த தொந்தரவு கொஞ்சம் குறையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
கும்பம்: இந்த ராசியினருக்கு சனியின் சஞ்சாரத்தால் சில கஷ்டங்கள் வருவது இயல்புதான். அதையெல்லாம் தாண்டி, முதியோர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவி செய்யும் பரிகாரம் மூலம் உங்களுக்குக் கெடுபலன்கள் குறையும். இனிமையான சொற்களை உபயோகித்தால் கிடைக்காத ஆர்டர்கள்கூட கிடைக்கும். இதனால் பணவரவு பெறுவது உறுதி.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்